ஜலதோஷத்தை விரைவில் குணமாக்கும் வழிகள்..!!
ஜலதோஷம் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். மருந்து எதுவும் சாப் பிடாவிட்டால் ஏழு நாட்களில் போய்விடும் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். ஜல தோஷத்துக்கென்று உடனடி தீர்வு கிடையாது. ஜலதோஷம் உடலை சமநிலைக்குக் கொண்டு வரும் தற்காப்பு. ஆகவே உடல் சரியானால்தான் ஜலதோஷம் சரியாகும்.
பெயரிலேயே இருப்பது போல (ஜலம்) குளிர்ந்த நீர், மழை, குளிர் காற்று ஆகிய காரணங்களால் ஜலதோஷம் உடனே வருகிறது. ஏறத்தாழ 200 வகை வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன என்பது வியப்பாக இருக்கும். ஜலதோஷம் இருப்பவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் கிருமிகள் காற்றில் பரவி, வேறு பொருட்கள் மீதும் படிந்து விடுகின்றன.
காற்றிலிருந்தோ அப்பொருட்களைத் தொடும்போதோ நம் உடலில் புகுந்து விடுகின்றன. நல்ல ஓய்வும், நல்ல உணவும், சுத்தமான சூழலும் இருந்தாலே ஜலதோஷம் சரியாகி விடும். ஆனால் மிகுந்த துன்பப்படுத்தி விடும். ஆயுர்வேதத்தில் ஜலதோஷம் வராமலிருக்கவும், வந்துவிட்டால் விரைவில் குணமாக்கவும் வழிகள் இருக்கின்றன.
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குணம் காணலாம்
* மஞ்சள் தூளைத்தணலிலிட்டு, அதன் புகையை உறிஞ்சலாம்.
* சீரகம் 1 தேக்கரண்டியை 1 டம்ளர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் 2 முறை அருந்தலாம். தொண்டை கரகரப்பும் சேர்ந்திருந்தால் சுக்குப்பொடி சிறிது கொதிக்கும் நீரில் சேர்க்கலாம்.
* 5, 6 மிளகினைத்தூள் செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் போட்டு கலக்கி தேன் சேர்த்து சில நாட்கள் இரவில் குடிக்கலாம்.
* தலையில் நீர்கோர்த்து இருந்தால் 1 கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூளைக் கலந்து ஒரு துளி மஞ்சள் தூளும் சேர்த்து தினமும் ஒருமுறையாக, குறைந்தது 3 நாட்களுக்கு குடிக்கலாம்.
* 1½ கப் நீரில் 1 இஞ்சி துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்து சூடாக குடிக்கலாம்.
* 1 கிராம்பு, கைப்பிடி அளவு துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி இலை, சீரகம், கண்டங்கத்திரி இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி, அவ்வப்போது குடிப்பது நல்ல பலன் தரும்.
* கொதிக்கும் நீரில் ஆவி பிடிப்பது நல்ல பலன் தரும். சில துளி யூகலிப்டஸ் தைலத்தை தண்ணீரில் சேர்ப்பது இன்னும் நல்லது. தலையில் நீர் கோர்த்திருந்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
* பூண்டு இயற்கையாகவே ஜலதோஷத்தை குணமாக்கும். பூண்டு பற்களை வதக்கி வாயிலிட்டுமென்று விழுங்கலாம். பூண்டில் உள்ள அலிசின் என்ற மூலக்கூறு ஜலதோஷம் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. அலிசின் மூலக்கூறு உள்ள மருந்துகளை சாப்பிடலாம். ஆனால் அதிக ரத்த அழுத்தம் உடையவர்கள் அலிசின் உள்ள மருந்துகளை சாப்பிடும் முன் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
* குழந்தைகள் குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டாலே சளி காய்ச்சல் வரும். தேஜோவதி மரப்பட்டையை கஷாயம் வைத்து 6 மாதம் கொடுத்தால் போதும்.
* கண்டங்கத்திரி 5 கிராம், திப்பிலி 5 கிராம், சீந்தில் கொடி 5 கிராம், 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, 100 மில்லி ஆகக்குறைத்து தேன் கலந்து காலை, மாலை 3 மாதம் சாப்பிட்டால் மூக்கில் நீர் வடிதல், சளி கட்டியாக வருதல், ஆஸ்துமா, சைன்ஸ் சரியாகும்.
Average Rating