ஒன்றரை வயது குழந்தையின் வயிற்றில் மூன்றரை கிலோ கரு… அறுவைசிகிச்சை மூலம் நிகழ்ந்த பிரசவம்..!!

Read Time:2 Minute, 29 Second

உலகில் என்னென்னவோ அதிசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதன்படி ஒன்றரை வயது குழந்தை கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜூ, சுமதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது குழந்தையான நிஷாவுக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது.

இந்த குழந்தைக்கு பிறந்தது முதலே வயிறு பெரிதாக இருந்தது. இது நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போனது. எனவே தந்தையான ராஜூ மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தையின் வயிற்றில் கருஒன்று வளர்ந்து இருப்பது கண்டு மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அந்த கரு மூன்றரை கிலோ எடை வரை வளர்ந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்து உள்ளே இருக்கும் கருவை வெளியே எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று கருதினர். அதன்படி உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

குழந்தையின் வயிற்றில் இருந்த கரு கர்ப்பிணி பெண்களுக்கு இருப்பதுபோல பனிக்குடத்துடன் கை, கால், தலை போன்றவை நன்கு வளர்ந்து இருந்தது. இதனை அகற்றியதன் மூலம் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, இது போன்ற சம்பவம் 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு நடக்கும்.

அதாவது தாயின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் உருவாகி அது ஒன்றோடு ஒன்று உள்வாங்கி இருக்கும். அல்லது குழந்தையின் ஸ்டெம் செல்கள் மூலம் கரு உருவாகி இருக்கும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளம்பரமில்லாமல் 15 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்..!!
Next post சினிமாவில் அறிமுகமாகும் ஜூலி! முதல் படம் இந்த இயக்குனருடன் தான்..!!