வருமான வரித்துறை சோதனையால் ஜாஸ் சினிமாஸ் முடங்கியது – லக்ஸில் காட்சிகள் ரத்து..!!

Read Time:1 Minute, 39 Second

இன்று காலை முதல் சசிகலா உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என 190 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. இதன் பகுதியாக சசிகலாவின் உறவினர் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா அலுவலகம் மற்றும் அதற்கு சொந்தமான லக்ஸ் சினிமா அரங்குகளிலும் சோதனை நடக்கிறது. இதன் காரணமாக வேளச்சேரியில் உள்ள லக்ஸ் சினிமாவின் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜாஸ் சினிமாஸை சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஜெயலிலதா உயிருடன் இருந்தபோதே ஜாஸ் சினிமாஸ் ஆரம்பிக்கப்பட்டது. வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் தொடங்கப்பட்ட சத்யம் சினிமாஸின் லக்ஸ் சினிமாவை வாங்கியது ஜாஸ். மொத்தம் 11 அரங்குகள்.

இன்று ஜாஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் முக்கியமான விநியோக நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் இன்று காலை முதலே வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் 11 அரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படம் பார்க்க ஆர்வத்துடன் வந்த பல பேர் காட்சிகள் இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பசங்களை பைத்தியமாக்கிய கேரள பெண்குட்டிகள் – இந்த ஆட்டம் போதுமா?(வீடியோ)
Next post படப்பிடிப்பில் கீழே விழுந்த கீர்த்தி சுரேஷ்… அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கு காத்திருந்த உண்மை..!! (வீடியோ)