அஜித் ஸ்டைலில் மீண்டு வருவேன்: சிம்பு பட இயக்குனர்..!!

Read Time:1 Minute, 45 Second

சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில் சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா நடித்திருந்தார்கள். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 80 சதவீதத்திற்கு மேல் முடிந்தும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விமர்சித்தும், இரண்டாம் பாகம் வருமா, வராதா என்று சிம்பு ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழலிலும் நீ தோத்துட்ட தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது. நெவர் எவர் கிவ் அப். என் முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் எழுந்து வருவேன்’ என அஜித்தின் ‘விவேகம்’ பட வசனத்தை பதிவு செய்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய அரசமைப்பை ஆதரிப்போர் கொல்லப்பட வேண்டுமா?..!! (கட்டுரை)
Next post பசங்களை பைத்தியமாக்கிய கேரள பெண்குட்டிகள் – இந்த ஆட்டம் போதுமா?(வீடியோ)