பூஜையுடன் தொடங்கியது அண்ணன், தம்பி ஆட்டம்..!!

Read Time:1 Minute, 30 Second

பசங்க’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸானது.

இவருடைய தயாரிப்பில் மற்றும் எழுத்தில் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். கார்த்தி, பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக, ‘வனமகன்’ படத்தில் நடித்த சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சத்யராஜ், பொன்வண்ணன், ஶ்ரீமன், சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழுக்கொழு கன்னங்களுக்கு இதை செய்தாலே போதும்..!!
Next post டோனியின் நடனத்திறமையை கண்டு ரசிக்கும் சாக்‌ஷி – வைரலாகும் வீடியோ..!!