பெண் கால்களிலிருந்து தானாக வெளியேறும் ஊசிகள்: தவிக்கும் அவலம்..!!

Read Time:3 Minute, 30 Second

பெண் ஒருவர் கால்களிலிருந்து ஊசிகள், ஆணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளியேறி வருவதால் வலியால் துடிக்கும் தன்னை மருத்துவர்கள் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் அனுஷியா தேவி (35) என்ற பெண் தான் இந்த விசித்திர பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012-லிருந்து அனுஷியாவின் கால்களிலிருந்து ஊசிகள், ஆணிகள் மற்றும் மருத்துவமனையில் பயன்படுத்தும் சிரஞ்சுகள் வெளியில் வருகின்றன.

இதன் காரணமாக அவரின் கால்கள் பெரிதும் பாதித்துள்ளதோடு, நடக்க, நிற்க மற்றும் உட்கார முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.அனுஷியாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டதால் சகோதரர் அவதிஷ் குமாருடன் அவர் வசித்து வருகிறார்.

அவராகவே கால்களில் ஊசி மற்றும் ஆணிகளை குத்தி கொள்கிறாரா என்ற சந்தேகம் சிலருக்கு வந்த நிலையில் நான் அனுஷியா உடன் பல வருடங்களாக வசிக்கிறேன், அவர் தானாகவே இப்படி செய்கிறார் என நான் நம்பவில்லை என அவதிஷ் குமார் கூறியுள்ளார்.

அனுஷியா கூறுகையில், வலியால் அவதிப்படும் என்னை மருத்துவர்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

உள்ளூர் மருத்துவர்கள் பலரிடம் காட்டியும் அவர்களால் அனுஷாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக கடந்த மாதம் 25-ஆம் திகதி பத்திப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுஷியா சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அவர் கால் பகுதியை X-ray எடுத்த நிலையில் அதிர்ந்து போனார்கள். காரணம் கால்களுக்கு உள்ளே 70 ஆணிகள், ஊசிகள் இருப்பது அதில் தெரிந்தது.

இது குறித்து அரசு மருத்துவர் நரேஷ் விஷால் கூறுகையில், அனுஷியா கால்களில் மட்டுமே ஊசிகள் இருக்கிறது, வேறு உடல் பகுதியில் இல்லை.

இது போன்ற விசித்தர நோயை நான் இதுவரை கண்டதில்லை. அவராகவே இந்த பொருட்களை கால்களில் குத்தி கொள்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது.

அனுஷியாவுக்கு மனநல கோளாறு உள்ளதா எனவும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு வலியை இத்தனை வருடங்கள் எப்படி பொருத்து கொண்டார் என தெரியவில்லை.

உயர் மருத்துவர்களிடம் அனுஷியாவின் நிலை குறித்து பேசி வருகிறோம், அவர் பிரச்சனையை தீர்க்க எங்களால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வோம் என கூறியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவுக்கு முன் தேங்காய்: என்ன நடக்கும் தெரியுமா?..!!
Next post உடலுறவால் ஏற்படும் நன்மைகள்..!!