அந்த 3 நாட்களில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்..!!

Read Time:2 Minute, 29 Second

பெண்களின் மாதவிடாய் காலத்தில் மிகுந்த வலி, துர்நாற்றம், எரிச்சல், சோர்வு, மன அழுத்தம், கோபம் மற்றும் பயம் போன்ற உணர்வுகள் வரக்கூடும்.

எனவே இந்த காலகட்டத்தில் பெண்கள் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், விட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது மட்டுமே மிகவும் ஆரோக்கியமானது.

சாப்பிடக் கூடாத உணவுகள்?

வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ், கேக், மாதவிடாய் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

வெங்காய சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

மாதவிடாய் காலத்தில் அதிகமாக வயிற்றுப்போக்கு உண்டானால், உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

>மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கோபம், வெறுப்பு, விரக்தி போன்ற உணர்வுகளை தடுக்க, இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

மாதவிடாய் காலத்தில் ஆல்கஹால் குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மாதவிடாய் வலியை அதிகரிக்க செய்து, சோர்வு நிலையை உண்டாக்கும்.

கொழுப்பு நிறைந்த சிவப்பு இறைச்சியை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதால் உடல் வலி உண்டாகும். எனவே ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த சால்மன் அல்லது டூனா போன்ற மீன் வகைகளை சாப்பிடலாம்.

மாதவிடாய் காலத்தில் காஃபின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சோர்வு, கோபம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவால் ஏற்படும் நன்மைகள்..!!
Next post விக்ரம் மகளின் திருமணத்தில் மனைவி கலந்து கொள்ளவில்லை ஏன் தெரியுமா?..!!