மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்பட்டது: இலியானா..!!

Read Time:1 Minute, 51 Second

தெலுங்கில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்று இருப்பவர் இலியானா. தற்போது ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆன்ட்ரூ நிபோனை காதலிக்கிறார்.

ஆரம்ப காலத்தில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி இலியானா கூறுகிறார்….

“ஒரு காலத்தில் எப்போதுமே நான் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பேன். அந்த கால கட்டத்தில் ஒரு வகையான மனச்சிதைவு இருந்திருக்கிறது. அதுபற்றி அப்போது எனக்குத் தெரியாது. சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். தற்கொலை செய்தால் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று கருதினேன்.

மனஅழுத்தம் என்பது கற்பனை அல்ல. அது உண்மையானது. அது தானாகவே சரியாகிவிடும் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். அதற்கு சிகிச்சை பெற வேண்டியது கட்டாயம். தயவு செய்து சிகிச்சை பெறுங்கள்.

நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொள்வது நல்லது. நடிகர், நடிகைகள் அழகாக இருக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இதற்காக நாங்கள் 2 மணி நேரம் மேக்கப் செய்து தயார் ஆகிறோம். உங்கள் மனம் அழகாக இருந்தால் நீங்கள் அழகு தான். மன அழுத்தம் ஒரே நாளில் சரியாகிவிடாது. படிப்படியாகத் தான் சரியாகும். பொறுமையாக இருக்க வேண்டும்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூசணிக்காயின் மூலம் அழகைப் பெறலாம்! எப்படி தெரியுமா??..!!
Next post சினிமாவை விஞ்சும் திருட்டு: ஓடும் லாரியில் குதித்து கொள்ளை – வைரல் வீடியோ..!!