ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி..!!

Read Time:2 Minute, 20 Second

‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர். தற்போது இவரது நடிப்பில் ‘ஏமாலி’ என்ற படம் உருவாகி உள்ளது. இதில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வி.இசட்.துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த அதுல்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இந்த டீசரில் அதுல்யா ரவி ஆடையைக் கழற்றுவது போலவும், படுத்திருக்கும் நிலையிலுமான காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் அதுல்யா சிகரெட் பிடிக்கும் காட்சியும் படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்தது.

முதல் படத்தில் ஹோம்லியாக நடித்துவிட்டு இப்போது இப்படியான நடிப்பில் இறங்குவது தவறு என்கிற வகையில் ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை வைத்திருந்தனர். ஒரு பக்கம் அதுல்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வந்தனர்.

இது குறித்து அதுல்யா ரவி கூறும்போது, ‘உங்களது நேர்மறையான ஊக்கத்திற்கு நன்றி. படத்தின் டீசரை வைத்தே படத்தையும், கதாபாத்திரத்தையும் முடிவு செய்யாதீர்கள். படத்தில் பாஸிட்டிவான கேரக்டரில்தான் நான் நடித்திருக்கிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு நான் நியாயமாகத் தான் நடித்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்திராத காட்சிகள் வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?..!!
Next post வியர்வையை அப்படியே துடைக்காமல் விட்டால் ஆபத்து! விரைவாக பகிருங்கள்..!!