தசாவதாரம் நாளை ரிலீஸ்; ரசிகர்களுக்கு கமல் கட்டளை; கட்-அவுட்டுக்கு ஆரத்தி, பால்அபிஷேகம் கூடாது

Read Time:3 Minute, 31 Second

கமலின் தசாவதாரம் படம் நாளை ரிலீசாகிறது. 10 வேடங்களில் அவர் நடித்திருப்பதால் இப் படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. டிக்கெட் முன்பதிவு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 10நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. சென்னையில் சத்யம், சாந்தம், தேவி, அபிராமி, ஸ்வர்ண சக்திஅபிராமி, சங்கம், பத்மம், ஐநாக்ஸ், ஆல்பர்ட், உட்லண்டஸ், உதயம், சூரியன், மினிஉதயம், கமலா, ஏவிஎம்.ராஜேஸ்வரி, மகாராணி, பிரார்த்தனா, ஆராதனா, ஸ்ரீபிருந்தா மாயாஜால், ரோகிணி, ஆகிய 21 தியேட்டர்களில் தசாவதாரம் வெளியாகிறது. அனைத்து தியேட்டர்களிலும் 4காட்சிகள் திரையிடப்படுகின்றன. முதல் 3நாட்கள் மட்டும் சிறப்புகாட்சிகள் திரையிடுகின்றனர். மொத்த தியேட்டர்களிலும் ஒரு நாளைக்கு 1000 காட்சிகள் திரையிடப்படும். ஒருநாள் மட்டும் 1லட்சம் பேர் படம் பார்ப்பார்கள் என கணக்கிட்டுள்ளனர். தசாவதாரம் பட ரிலீசை விழாவாக கொண்டாட கமல் ரசிகர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஏழைகளுக்கு உதவிகளும் வழங்குகிறார்கள். அதே நேரம் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தல், ஆரத்தி எடுத்தல், பொதுமக்களுக்கு இடைïறு செய்து பட்டாசு வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ரசிகர்களுக்கு கமல் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். ரசிகர் மன்றம் சார்பில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தியேட்டர் வாசலிலும் 300 பேனர்கள் வரை அமைக்கப்படும் என்று கமல் ரசிகர் மன்ற நிர்வாகி ஆர்.குணசீலன் தெரிவித்தார். இந்த பேனர்கள் ஒருவாரம் மட்டுமே இருக்கும் படம் ரிலீசுக்கு 3நாட்களுக்கு முன்பு கட்டிவிட்டு ரிலீசான 3வது நாள் அவிழ்த்து விடுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தசாவதாரம் ரிலீசை கொண்டாடும் வகையில் படம்பார்க்க வருவோருக்கு உதவிகள் வழங்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் பெண்களுக்கு இலவச ஜாக்கெட், குங்குமசிமிழ், போன்றவைகளை வழங்குகிறார்கள். வேறு மாவட்டங்களில் முதியோர்களுக்கு இலவச வேட்டி வழங்க ஏற்பாடு செய்துள் ளனர். இனிப்பு, குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. பாலாபிஷேகம், ஆரத்தி, பட்டாசு வெடிப்பதற்கு கமல்சார் துளிகூட விரும்புவதில்லை. எனவே தான் நற்பணிகள் செய்து தசாவதாரத்தை ரசிகர்கள் வரவேற்கின்றனர் என்றார் ஆர்.குணசீலன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தசாவதாரத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு -தசாவதாரம் நாளை உலகெங்கும் ரிலீஸாகிறது
Next post “வாவ்.. எக்ஸலெண்ட்… பின்னிட்டப்பா….” தசாவதாரம் சிறப்புக் காட்சியைப் பார்த்து முடித்த கையோடு -கமலிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்