ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்தது மகிழ்ச்சி: ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

Read Time:1 Minute, 36 Second

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மணிரத்னம், ஏ.எல்.விஜய் படங்கள், கவுதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, பிரபு தேவாவுடன் ஒரு படம் என்று பிசியாக நடித்து வருகிறார்.

இந்த இடத்தை பிடித்தது பற்றி கூறிய அவர்…

“‘காக்காமுட்டை’ படத்துக்கு முன்பு சிறிய வேடங்களில் நடித்தேன். ‘காக்காமுட்டை’ படத்துக்கு பிறகு தான் எல்லோருக்கும் நம்பிக்கை வந்தது. 6 வருடங்கள் போராடி இந்த இடத்தை பிடித்து இருக்கிறேன். ரசிகர்கள் மனதில் எனக்கு ஒரு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது தமிழ், மலையாளம், இந்தி என 3 மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையாள படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. என்னிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப நடிப்பேன்.

‘வடசென்னை’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறேன். இதில் முடிந்த வரை சிறப்பாக நடித்திருக்கிறேன். இதில் வசனம் பேச தனுஷ் உதவி செய்தார். எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் வளர்ந்ததற்கு தன்னம்பிக்கை தான் காரணம். திறமை இருந்தால் யாரும் வெற்றி பெறலாம்”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளி இறகுகளுடன் வானத்தில் பறக்கும் மனித உருவங்கள்…!! (வீடியோ)
Next post ஜேர்மனியில் சர்ச்சையை கிளப்பிய புதிய மைதானம்: வைரல் வீடியோ ..!!