சண்டை காட்சியில் நிஜமாகவே அடிவாங்கிய உதயநிதி..!!

Read Time:2 Minute, 6 Second

கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், சூரி, மஞ்சிமாமோகன், ராதிகா நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’. லைகா தயாரித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய உதயநிதி…

“இந்த படத்தில் ராதிகா எனக்கு அம்மாவாக நடிக்கிறார். பஸ் டிரைவராக வருகிறார். இதற்காக பஸ் ஓட்ட பயிற்சி பெற்று திருவண்ணாமலையில் பஸ் ஓட்டினார்.

ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். சண்டைக்காட்சியின் போது நிஜமாகவே என்னை அடித்துவிட்டார். பாலாவின் ‘தாரைதப்பட்டை’ படத்தில் நடித்ததால் அப்படி இயல்பாக நடித்தார். மஞ்சிமா மோகன் நாயகியாக நடித்துள்ளார். ஓமன் நாட்டில் பாடல் காட்சி படமானது. அதில் சிறப்பாக நடித்தார்.

நானும் சூரியும் இந்த படத்தின் மூலம் 3-வது முறையாக சேர்ந்து நடித்திருக்கிறோம். இயக்குனர் கவ்ரவ் ஆக்ரோ‌ஷமாக கதை சொல்வார். இந்த படத்தில் முதல் முறையாக 7 கேமரா வைத்து படமாக்கி இருக்கிறார். சூரி இதில் காமெடியில் மட்டுமல்ல குணசித்திர வேடத்திலும் கலக்கி இருக்கிறார்” என்றார்.

ராதிகா பேசும்போது, “இந்த படத்திற்காக உண்மையாகவே பஸ் ஓட்டினேன். டிராபிக் ஜாம் காரணமாக இந்த விழாவுக்கு தாமதமாக வந்தேன். மற்ற நாடுகளை விட இங்கு தான் போக்குவரத்து நெரிசல் அதிகம்” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் சூரி, மஞ்சிமாமோகன், இயக்குனர் கவுரவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டிலில் கதறி துடித்த மனிதர்… என்ன காரணம் தெரியுமா?..!! (வீடியோ)
Next post குழந்தைகள் முதலைகளுடன் விளையாடுவதற்கு தடை: ஜேர்மன் நீதிமன்றம் உத்தரவு..!! (வீடியோ)