உடலுறவில் முழு சுகம் கிடைக்காமல் போக இது தான் காரணம்னு தெரியுமா?..!!

Read Time:6 Minute, 56 Second

உடலுறவு என்பது நமது ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. மன அழுத்தம் என்பது வெறும் மன அழுத்தமாக மட்டுமே இருப்பதில்லை… இது வளர்ந்து நமக்கு பெரிய பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்த கூடியது. உடலுறவு கொள்வதால் தம்பதிகளுக்கு இடையே ஆன நெருக்கம் அதிகரிக்கிறது. இது போன்ற ஏராளமான நன்மைகள் உடலுறவு கொள்வதால் உண்டாகின்றன. ஆனால் உடலுறவின் மூலம் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் பெற வேண்டும் எனில், உடலுறவு கொள்ளும் போது மனதில் எந்த விதமான மன சஞ்சலமும், குழப்பமும், பயமும் இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால், உடலுறவு என்பது ஒரு சுமையாகி விடும். இதுவே ஒரு மன அழுத்தமாகி விடவும், உடலுறவின் மீது வெறுப்புகள் உண்டாகவும் இது காரணமாகி விடும். பலர் உடலுறவின் போது தேவையற்ற பயங்களுக்கு ஆளாகின்றார்கள். இந்த பயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். உடலுறவின் போது உணர்வு ரீதியாக இரு மனங்கள் இணைவது என்பது கட்டாயமாகும்.

1. கர்ப்பம் ஆகி விடுமோ! இளைஞர்கள் பெரும்பாலும் கர்ப்பம் தரித்து விடுமோ என்ற பயத்தினை உடலுறவின் போது கொண்டுள்ளனர். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே உடலுறவின் போது உண்டாகும் பயம் தான். ஆணுறை அணிவதன் மூலம் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கலாம். ஆனால் முந்தைய கர்ப்ப அனுபவம் ஏதேனும் இருந்தால், இது போன்ற பயம் அதிகப்படியானவர்களுக்கு தொற்றிக் கொள்கிறது. இதற்கு நீங்கள் ஆணுறையை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதனால் நீங்கள் தேவையற்ற கர்ப்பங்களுக்கு ஆளாகாமல் இருக்கலாம்.

2. வலி பற்றிய பயம் இந்த பயம் அனைத்து பெண்களுக்கும் இருக்க கூடியது தான். முதல் முறையிலான உடலுறவின் போது நிச்சயமாக வலி உண்டாகும். இது தவிர்க்க முடியாத ஒன்று என்ற போதிலும் கூட வலியை குறைக்கலாம். உங்களது துணையை மெதுவாக செயல்படும் படி வலியுறுத்தலாம். இதனால் வலி குறையும். அல்லது நீங்கள் தேங்காய் எண்ணெய், அல்லது இதற்காகவே பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் க்ரீம் போன்ற பொருட்களை பயன்படுத்தி வலியிலிருந்து விடுதலை பெறலாம்.

3. உடல் அமைப்பு : தனது உடலமைப்பு எப்படி இருக்கிறதோ… கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகள் அகற்றப்படாமல் இருக்கிறதே… அந்தரங்க பகுதிகள் கருமையாக உள்ளதே.. என்னை பற்றி துணை என்ன நினைப்பார் போன்ற பயங்கள் பொதுவாக பெண்களுக்கு அதிகமாக இருக்கும். இதனால் பெண்கள் உடலுறவில் முழுமையாக ஈடுபடாமல் போகிறார்கள். ஆனால், ஆண்கள் பொதுவாக உடலுறவின் போது இந்த விஷயங்களை எல்லாம் கவனிப்பது இல்லை.. எனவே இதனை பற்றி எல்லாம் பெண்கள் யோசித்து கவலைப் படாமல் இருப்பது இல்லை

4. இன்பம் தர முடியாதோ? பல ஆண்களுக்கு உடலுறவின் போது நமது ஆண் உறுப்பு போதிய அளவு பெரியதாக உள்ளதா? அல்லது சீக்கிரமாகவே உச்சமடைந்து விடுவோமோ என்ற பயம் பெரும்பாலான ஆண்களுக்கு உள்ளது. இதனால் அவர்கள் மனதளவில் பின்னோக்கி சென்று விடுகிறார்கள். உடலுறவுக்கு முன்னர் ஆண்கள் முதலில் மனதளவில் தயாராக வேண்டியது அவசியம். மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பாலியல் திரைப்படங்களை கண்டுவிட்டு இவர்களை போல நம்மால் இருக்க முடியவில்லையே என்று நினைக்கும் எண்ணம் முற்றிலும் தவறானது. அவை அனைத்தும் காட்சிக்காகவும், வருமானத்திற்காகவு எடுக்கப்பட்டவை… உண்மை இல்லை என்பதை உணருங்கள்.

5. வாயுத்தொல்லை பயம் உடலுறவின் போது உண்டாகும் வாயுத்தொல்லை குறித்து அனைவருக்குமே பயம் இருக்க தான் செய்யும். இது ஆண், பெண் இருவருக்கும் கூச்சத்தை ஏற்படுத்தும் விஷயமும் கூட.. இதனை எண்ணி எண்ணி நீங்கள் பயம் கொள்பவராக இருந்தால், வாயுத்தொல்லையை உண்டாக்கும், நிலைகளில் உடலுறவு கொள்ள வேண்டாம். இது அவ்வளவு பெரிய விஷயமும் அல்ல. அதிகப்படியானோர்களுக்கு இது உள்ளது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதனை பற்றிய அச்சமோ, கூச்சமோ வேண்டாம்.

6. தொற்றுகள் உடலுறவின் போது ஏதேனும் தொற்றுகள் உண்டாகி விடுமோ என்ற பயம் பலருக்கு உண்டு. ஒரு சில நோய்கள் தாக்கி இருக்கும் போது உடலுறவு கொள்வதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி பாலியல் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், அதை மருத்துவரிடம் உறுதி செய்து கொண்டு உடலுறவு கொள்ளலாம்.

7. துர்நாற்ற பயம் வாய் மற்றும் உடல் துர்நாற்றம் பற்றி பலர் உடலுறவின் போது கவலைப் படுகின்றனர். இதனால் அவர்களால் தங்களது மனதை நிலையாக உடலுறவின் மீது கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே சிலர் உடலுறவுக்கு முன்னர் மௌத் வாஷ் பயன்படுத்துவது, வாசனை திரவியங்களை பயன்படுத்துவது என கூறி அதிகப்படியாக உபயோக்கித்து அருகில் நெருங்க முடியாத படி செய்து விடுகிறார்கள். எனவே இவற்றை தடுத்து, உடலை இயற்கையான முறையில் நறுமணமாக வைத்துக் கொள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த சம்பவத்தை குழந்தைகள் பார்த்துவிட்டார்களே!… மனமுடைந்து தாய் தற்கொலை..!!
Next post சரும வறட்சியை போக்கும் தயிர் பேஸ் பேக்..!!