கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்கும் வழிகள்..!!

Read Time:4 Minute, 22 Second

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில்தான் கொசுக்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கொசுக்கடியினால் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, அதன் பாதிப்பை குறைக்க வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டு என்னென்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமையல் அறையில் பயன்படுத்துப்படும் பேக்கிங் சோடாவினை கொசுக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணீரைக் கொண்டு கொசுக்கடி பாதித்த பகுதிகளில் தடவிடுங்கள். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம். பேக்கிங் சோடா பயன்படுத்துவதற்கு முன்னதாக உங்கள் சருமம் சென்சிடிவ்வானதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.

கொசுக்கடிக்கு டீ ட்ரீ ஆயில் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கும். கொசுக்கடி பாதிப்புகளையும் அதனால் ஏற்படும் சருமப் பிரச்சனைகள், அரிப்பு போன்றவற்றை குறைக்க டீ ட்ரீ ஆயில் பயன்படுகிறது. இரண்டு சொட்டு டீ ட்ரீ ஆயிலை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து சருமத்தில் தடவலாம்.

குளிர்ச்சியான அதே சமயத்தில் உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க கற்றாழை ஜெல் பெரிதும் உதவுகிறது. கொசுக்கடியினால் சருமம் சிவந்திருந்தாலோ, அல்லது வீக்கம் ஏற்பட்டிருந்தாலோ கற்றாழை ஜெல் அதனை தீர்க்கும். கற்றாழை செடியின் இலையை பாதியாக நறுக்கி அதனை சருமத்தில் தேய்க்கலாம். இதனுடன் வேறு எதுவும் சேர்க்கத் தேவையில்லை. கடைகளில் தனியாக கற்றாழை ஜெல் கிடைக்கிறது. ஆனால் அதில் கெமிக்கல் கலந்திருப்பார்கள் என்பதால் இயற்கையாக கிடைத்திடும் கற்றாழை ஜெல் பயன்படுத்துவது தான் நல்லது.

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான, ஆன்டி-பயோட்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துவது தான் சிறந்தது. ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண்டு, வெயிலில் சென்றால், சூரியக்கதிர்களின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

பெரும்பாலானோர் சருமப் பாதுகாப்பிற்கு அதிகம் பயன்படுத்துவது சந்தனம். கொசுக்கடியைத் தவிர வேறு எந்த பூச்சி பாதிப்பிகளினால் சருமம் பாதிக்கப்பட்டாலும் அதனை தவிர்க்க சந்தனம் பயன்படுகிறது. சந்தனத்தை தண்ணீரில் குழைத்து கொசுக்கடி ஏற்ப்பட்டிருக்கும் இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடங்கள் காய்ந்த பிறகு கழுவி விடலாம்.

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இதில் ஆண்ட்டி அலர்ஜி துகள்கள் நிறையவே இருக்கின்றன. இதனை சருமத்தில் தடவுவதால் அலர்ஜி பாதிப்புகள் மிகவும் குறைந்திடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்து ஒரு படம்! மேயாத மான் பிரியா பவானிக்கு இன்னொரு ஆஃபர்..!!
Next post எந்திரன் சிட்டி போல உண்மையான மனித ரோபோ “சோபியா 2.0”! மிஸ் பண்ணிடாதீங்க..?..!! (வீடியோ)