சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்கள்..!!

Read Time:2 Minute, 45 Second

தற்போது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வும், சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றன.

ஆனால் சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இதோ, விவரம்…

கம்பு: ‘டைப் 2’ சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவறட்சி போன்றவை நீங்க கம்பங்கூழை மோரில் கலந்து பருகலாம்.

கேழ்வரகு: உடல்பருமன் குறைய உதவும். சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த உதவும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும்.

குதிரைவாலி: செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். சர்க்கரைநோயாளிகளுக்கு குதிரைவாலி சிறந்த உணவு. இதில் நிறைந்துள்ள கால்சியம் எலும்பை வலுப்படுத்தும்.

வரகு: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். வயிற்றுப்புண், முதுகுவலி, மூட்டுவலி போன்றவற்றைச் சரிசெய்யும். ரத்த சுத்திகரிப்பானாகச் செயல்படுவதுடன், ரத்த உற்பத்திக்கும் உதவும்.

சோளம்: செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல்பருமன் குறைக்க உதவும். செல்களை புத்துணர்வு பெறச்செய்யும். அவற்றின் வளர்ச்சிக்கு உதவும்.

சாமை: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். ரத்தசோகையைப் போக்கும். நார்ச்சத்து நிறைந்தது. உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

திணை: உடனடி சக்தியை தரக் கூடியது திணை. இது செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். கொழுப்பைக் குறைக்கும். உடல்பருமனைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிவின் பாலியின் ரிச்சி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
Next post பொண்ணுங்க அதில் எப்படி இருக்கனும்? ஆண்களே சொல்றாங்க கேளுங்க..!!