இரவு நேர வயிற்று வலியை எப்படித் தவிர்ப்பது?..!!

Read Time:2 Minute, 19 Second

சாதாரண வயிற்று வலிகள் அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தால் ஏற்படுபவை. அவற்றில் மாற்றங்கள் செய்தாலே போதுமானது. தொடர் வயிற்று வலியால் அவதிப்படுபவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை தேவை.’’

‘‘சாதாரண வயிற்று வலிகள் உணவின் காரணமாகவே பெரும்பாலும் ஏற்படுகிறது. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள நேரும்போது வயிற்று வலிகள் ஏற்படும். இதுபோன்ற வயிற்றுவலிகள் இரவு நேரங்களில்தான் வருகின்றன. தாமதமாக உண்பது, அளவுக்கு அதிகமாக உண்பது போன்ற காரணங்களால் இந்த இரவு நேர வயிற்றுவலிகள் ஏற்படுகின்றன.’’

இரவு நேர வயிற்று வலியை எப்படித் தவிர்ப்பது?

‘‘இரவு நேரங்களில் வயிற்றில் உள்ள உணவு அனைத்தும் செரிமானம் ஆன பிறகு உறங்கச் சென்றால் இந்தவித வயிற்றுவலிகள் வராது. ஆனால், தாமதமாக உணவு அருந்திவிட்டு உடனே படுக்கச் செல்வதால் வயிற்றில் உள்ள உணவுகள் அப்படியே தங்கிவிடுகின்றன.

இரவில் உடலுக்கு எந்த வேலையும் நாம் கொடுப்பதில்லை. அதனால் செரிமானத்துக்கு தாமதமாகிறது. எனவே, உறங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது.

அதேபோல், இரவில் உடலுக்கு வேலை குறைவு என்பதால் குறைவாக உண்பது அவசியம். சிலர் பகலில் உறக்கம் வருவதால் குறைவாக உண்டு, இரவு உறங்கத்தானே செல்கிறோம் என்று வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவார்கள்.

இது தவறு. காலை உணவில் பாதி அளவை மட்டுமே இரவில் சாப்பிட வேண்டும். உணவால் இதுபோல் தோன்றும் வயிற்று வலிகள் தோன்றி சில நேரங்களில் மறைந்துவிடும். ஆனால், இதுவே வழக்கமானால் அது வேறுவிதமாக விஸ்வரூபமெடுக்க வாய்ப்பு உண்டு.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞர் ஆனது மகிழ்ச்சி: அருண் பாரதி..!!
Next post ஷாருக்கான் மகள் அணிந்திருக்கும் ஷுவின் விலை தெரியுமா?..!!