முதலிரவு அறையில் ஏன் மெழுகுவர்த்தி ஏற்றவேண்டும்? அதன் இரகசியம் என்ன?..!!

Read Time:4 Minute, 6 Second

ஆண் பெண் இல்லற பந்தத்தில் முதலிரவு என்பது புனிதமிக்க ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். வெளிப்படையற்று இருந்த இருமனம் ஒன்றாகும் அற்புதமிக்க தருணமாகும்.

உடலும் மனமும் ஒன்றாகச் சங்கமிக்கும் அந்த நாளானது புதிய அனுபவம், புதிய புரிந்துணர்வு, புதிய உறவுமுறை என்பனவற்றை நடைமுறையில் தோற்றுவிக்கும் ஒரு நாளாகும்.

கல்யாண இணையர் இருவரும் பலப்பல எதிர்பார்ப்புக்களையும் எண்ணங்களையும் மனதில் சுமந்தவாறே முதலிரவைச் சந்திக்கின்றனர்.

சிலரது இல்லற வாழ்வின் தொடக்கத்தையே இரசனை மிக்க ஒன்றாக மாற்றுவதும் அல்லது கசப்புமிக்க ஒன்றாக மாற்றுவதும் முதலிரவின் அனுபவத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இதனைக் கருத்திற்கொண்டு தம்பதியினர் இருவரும் தம்மை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். முதற்கோணல் முற்றும் கோணல் என்ற நிலையினை முதலிரவு தந்துவிடக்கூடாது என்பதை கணவனும் மனைவியும் கண்ணிலே எண்ணெயை ஊற்றி கவனித்துக்கொள்ளவேண்டும்.

முதலிரவு என்றால் பலருக்கும் பாலியல் நடவடிக்கைதான் மனக் கண்ணுக்கு வந்துபோகும். உண்மையிலேயே முதலிரவு என்பது பாலியல் நடத்தைக்கானது மட்டுமானதுதானா?

இவ்வாறான எண்ணம்தான் குடும்பத்தின் முதற்கோணலாகின்றது. பாலியல் நடத்தையை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல முதலிரவு.

கணவன் மனைவி இருவரும் தம்மிடையே சரியான புரிந்துணர்வினைக் கட்டியெழுப்ப மங்கலான வெளிச்சத்தில் மனம் விட்டுப் பேசவேண்டும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளர்கள்.

மங்கலான வெளிச்சத்தை மின்சாரத்தில் ஒளிரும் சிறிய விளக்குகளும் மெழுகுவர்த்தி போன்ற எரி விளக்குகளும் தரலாம். இதிலும் மெழுகுவர்த்தி போன்ற எரி விளக்குகள்தான் இன்னும் அற்புதமானது என்று சொல்லப்படுகிறது.

மெழுகுவர்த்தியின் ஒளியானது இருண்ட அறையில் மனித முகத்தில் புதுவித அழகு நயத்தினைத் தூண்டக்கூடியது. கணவனும் மனைவியும் எதிர் எதிர் அமர்ந்து பேசுகின்றபோது இந்த மெழுகுவர்த்தி ஒளியானது ஒருவருக்கொருவர் அழகியல் உணர்வினைத் தூண்டி பரஸ்பர அன்பினையும் ஆசையினையும் தூண்டவல்லது.

மெழுகுவர்த்தியும் மின்குமிழும் ஏறத்தாள ஒரே ஒளியினைத் தந்தாலும் இயற்கை எரிவொளியான மெழுகுவர்த்திக்கு வித்தியாசமான ஒரு பண்பு இருக்கின்றது. அதுதான் அதன் சுடர்.

மெழுகுவர்த்தியின் சுடரானது மெல்லிய காற்றில் ஆடியசைகின்றபோது அதன் ஒளியினைப் பருகும் மனித முகங்கள் புதுப்பொலிவு பெறுகின்றன. இதன் காரணத்தாலேயே முதலிரவன்று முதலிரவு அறையில் மெல்லிய மங்கள் ஒளியினைத் தரவல்ல மெழுவர்த்தியை ஏற்றுமாறு உளவியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

இவ்வாறு இன்பமாய் அமையும் முதலிரவானது மண வாழ்க்கையின் அற்புதமிக்க தருணமாக அமையும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை எனலாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொட்டை ராஜேந்திரனுக்கு கிடைத்தது அதிர்ஷ்டம்..!!
Next post பெண்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்..!!