தமிழ்த் தேசியத்தலைவர் ஆனந்தசங்கரிக்கு யுனேஸ்கோ விருது-

Read Time:1 Minute, 55 Second

Anandasangari.jpgயுனோஸ்கோ அமைப்பு இவ்வருடத்திற்குரிய அகிம்சைக்கும் சகிப்புத்தன்மைக்குமான முன்னெடுப்புக்கான விருதை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அகிம்சையையும், சகிப்புத் தன்மையையும் முன்னிலைப்படுத்தும் அகில உலக தலைவர்களுக்கு வழங்கப்படும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அதியுயர் சர்வதேச யுனெஸ்கோ விருது தமிழர் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் நெருக்கடியான ஒருகாலகட்டத்தில், ஜனநாயகத்திற்காகவும், பன்முக அரசியலுக்காகவும், அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக திரு.ஆனந்தசங்கரி அவர்கள் நிகழ்த்திய போராட்டத்திற்கான சர்வதேசத்தின் அங்கீகாரமாகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

உலகம் முழுவதிலுமிருந்து 6 அரசியல் தலைவர்கள் இவ்விருதிற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதிலும் ஆனந்தசங்கரி அவர்களை யுனோஸ்கோ தேர்ந்தெடுத்து இவ்விருதை வழங்கியுள்ளது. அத்துடன் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களும் நன்கொடையாக அறிவித்துள்ளது.

தமிழ் மக்களின் தலைவராக திரு.ஆனந்தசங்கரி அவர்களை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதாகவே இவ்விருது வழங்கல் கணிக்கப்படுகிறது என்பது அரசியல் அவதானிகளின் அபிப்பிராயமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முகமாலை பகுதியில் புலிகள்- ராணுவம் கடும் சண்டை
Next post கிரிக்கெட் தர வரிசை -3வது இடத்தில் இந்தியா