பெண்கள் விரும்பும் தங்க நகைகளில் புதுமை செய்யலாம்..!1

Read Time:3 Minute, 51 Second

தங்க நகைகளின் ஃபேஷன் என்பது பண்டிகைகளில் மாறிக் கொண்டேயிருப்பது தானே. தற்போது பழமையான நகை டிசைன்களை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். புதிய டிசைன்களை பழைய முறையிலும், பழைய டிசைன்களை புதிய முறையிலும் எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று பார்ப்போம்.

கழுத்தணிகள்: நெக்லஸ் வகைகள் மிகவும் அத்தியாவசியமான ஒரு நகை. சில வருடங்களாக பல அடுக்குகள் கொண்ட நெக்லஸ்கள் கடைகளிலும் விதவிதமாக நிறைய இருக்கின்றன. உங்களுக்கு அது வேண்டாம், ஒற்றை வரிசைதான் வேண்டும். ஆனால் கழுத்து நிறைந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா.

அப்படியென்றால் ஒற்றைக் கல் வரிசை நெக்லஸ்கள், முத்துமாலைகள், நவரத்தின மாலைகள் போன்றவைகளை பல அளவுகளில் வாங்கி மிக்ஸ் அன்ட்மேட்ச் முறையில் அணிந்து கொள்ளலாம். திருமணம் போன்றவைகளுக்கு அதிக வரிசைகளையும், தேவைக்கேற்ப ஓர் இரண்டு வரிசைகளையோ அணிந்து கொள்ளலாம். சிகப்புக்கல், பச்சைக்கல் வரிசைகளின் இடையே தங்கம், வைரம் மற்றும் முத்து வரிசை அணியும் போது மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

காதணி: எந்த காலத்திற்கும் பொருந்தும் ஜிமிக்கிகள் தற்போது ஃபேஷனாக மாறி வருகிறது. இதில் சிற்சில மாற்றங்களுடன் அணியலாம். குண்டு ஜிமிக்கிக்கு நீளமான கம்மல்கள், நீளமான ஜிமிக்கிக்கு வட்டமான கம்மல்கள், சிறிய கம்மலிலிருந்து நீளமான செயின் வந்து அடியில் தொங்கும் சிறிய ஜிமிக்கி ஜிமிக்கியுள்ள முத்துக்கள் ஆடாமல் அடர்த்தியாக தொடுக்கப்பட்டிருக்கும் ஜிமிக்கி, ஒற்றைக்கல் கம்மலிலிருந்து தொங்கும் குட்டி ஜிமிக்கி என்று இவற்றை வித்தியாசமாக வாங்கி அணியலாம்.

கழுத்து வரையில் நீண்டு தோள்பட்டையில் மோதும் காதணிகள் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும்.

வைர நகைகள்: பெண்களுக்கு எப்போதுமே பிடித்ததாக வைரம் இருக்கும். வைரக் கற்களில் வட்டம் இல்லாமல் சதுரக் கற்கள், நீள் சதுரம் பியர் வடிவம் போன்றவைகளை தேர்ந்தெடுப்பது வித்தியாசமாக இருக்கும். இதில் ரேடியண்ட், பிரின்செஸ், குஷன் கட் உள்ள வடிவமைப்பு பார்ப்பவரை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை. வெள்ளை மற்றும் ரோஸ் கோல்ட்டினால் ஆன நகைகளில் வைர அணிவது கூடுதல் அழகைத்தரும்.

எந்த நகை வாங்கினாலும் அவற்றை மாற்றி மாற்றி அணியக்கூடிய வகையில், டிட்டாச்சயின் டிசைன்களாக தேர்ந்தெடுத்து வாங்கினால் அவற்றை மாற்றி போட்டு அணியும் போதும் புதியது அணியும் உணர்வே எழும். பார்ப்பவர்களுக்கும் புதியதாகவே தோன்றும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவில் திருப்தியடைய தம்பதிகள் இதெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா..?
Next post கணவர் சைதன்யாவுக்காக முடிவை மாற்றிய சமந்தா..!!