இனி தீபாவளி விடுமுறைக்கு விண்வெளிக்கே போய் வரலாம்..!! ( வீடியோ)

Read Time:2 Minute, 23 Second

எதிர்காலத்தில் குறைவான நேரத்தில் விண்வெளிக்கு ஓர் ஆனந்தச் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.தீபாவளிக்கு கிடைத்த விடுமுறைக்கு எங்கே சுற்றுலாப் போவது என்ற யோசனைகளே இப்போது பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு பேசாமல் வீட்டிலேயே இருப்பதும் ஆனந்தமே.

அப்படியானவர்களை விட்டுவிடுவோம் அவர்கள் சுதந்திரத்தில் நுழையவில்லை. சரி விடயத்திற்கு வரலாம் எதிர்காலத்தில் விடுமுறைக்கு விண்வெளிக்குச் சென்று வரலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் இருந்து ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்று வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையிலேயே ஓர் மிகப்பெரிய மின் உயர்த்தியை (Elevator) விஞ்ஞானிகள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் ஆய்வுகளில் இருந்தபோது ஈர்ப்புவிசை விதிகளினால் விவாதங்கள் ஏற்பட்டிருந்தன.இந்த நிலையில் அதி நவீன கார்பன் நனோ குழாய்கள் (Carbon nanotubes) மூலமாக இந்த மின் உயர்த்தியினை உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பூமியில் இருந்து சுமார் 80000 கிலோ மீற்றர்கள் உயரத்திற்கு விண்ணுக்குச் சென்று விட்டு மீண்டும் பூமியை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.இந்த திட்டத்தின் படி எதிர்காலத்தில் விண்வெளிக்கு சென்றுவரும் இந்த மின் உயர்த்தியை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் காக்கிச்சட்டை போடும் அஜித்?..!!
Next post பவர்ஸ்டார் சீனிவாசன் மீது ரூ.4 லட்சம் மோசடி புகார்..!!