விலைமாதுவாக நடிக்கும் சதா..!!
‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சதா. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ் பட உலகில் அழுத்தமாக கால் பதிக்கிறார்.
தற்போது நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார்கள். அது போன்று ‘டார்ச்லைட்’ படத்தில் நாயகியை முன்னிலைப்படுத்தும் வேடத்தில் சதா நடிக்கிறார். இந்த படத்தை விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல்மஜித் இயக்குகிறார்.
‘டார்ச்லைட்’ படத்தில் சதாவுக்கு விலைமாது வேடம். இது பற்றி கூறிய இயக்குனர் அப்துல்மஜித்…
“பாலியல் தொழிலாளி பற்றிய பல கதைகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த கதை அது போன்றது அல்ல. இந்த தொழிலில் ஈடுபடும் சிலரை சந்தித்து, அவர்கள் பின்னணி குறித்து கேட்டேன். அப்போது எந்த சூழ்நிலையால் இந்த தொழிலில் இறங்க நேர்ந்தது என்பதை கூறினார்கள். சிலர் கணவரை காப்பாற்றவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் இதை செய்கிறார்கள். வியாபார நோக்கத்தில் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். சதாவின் விலைமாது வேடத்திற்கு இந்த படத்தில் முக்கியமான பின்னணி உள்ளது. கதையை நான் அவரிடம் சொன்ன போது கேட்டு கண்ணீர் விட்டார்.
இந்த படம் சதாவுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். அவரது கதாபாத்திரம் பேசப்படும். திரை உலகில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating