டென்ஷனில்லாம எப்போதும் ஹாப்பியா இருக்கணுமா?..!!
டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது; அதுக்காக சில செயல்களை நிச்சயமா நாம செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். அப்படி என்ன செய்யணும்னு கேக்கறீங்களா?
மற்றவரை மன்னியுங்க….! தவறு செய்வது மனித இயல்பு. எனவே, உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். போன முறை அவன் தவறு செய்தான் மன்னித்தேன்; இனியும் என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதோடு, உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் இதற்கு நல்ல பலன் உண்டு.
ஒருவரை நீங்கள் மன்னிக்க முடியாமல் இருக்கும் போது, அவரைப் பார்த்த உடனேயே அவர் உங்களுக்கு செய்த தீங்கு தான் நினைவிற்கு வரும். அதனால், அவர் மீது கோபம் வரும். அந்த கோபம் டென்ஷனாக மாறும். டென்ஷன் அதிகரிக்கும் போது, உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோமேட்டிக்காக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும். எனவே,”மறப்போம் மன்னிப் போம்’ என்பதை உங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றை விட்டொழியுங்கள். உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்திற்கு மற்ற எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் வடிகால் ஏற்படுத்திக் கொடுங்கள். இவை மற்றவர்களை ஒரு போதும் காயப்படுத்துவதில்லை; மாறாக, யார் இவற்றை வைத்திருக் கிறார்களோ அவருடைய ஆரோக்கியத்தை தான் பாதிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிஞ்சோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம்.
அப்படி தவறு செய்ய நேரிடும் போது, உங்களால் பாதிக்கப்பட்ட நபர் யாராக இருப்பினும் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள். உங்களை விட வயதிலோ, வசதியிலோ அல்லது ஏதோ ஒரு விதத் தில் தகுதி குறைவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், உங்கள் தவறை மட்டும் மனதில் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள். அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்க்கும் போது, உங்கள் எதிராளி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படி எதிராளி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள்.
நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதன் மூலம், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெறலாம். மன அமைதியும் கிடைக் கும். இல்லாவிட்டால், அவை மனதை அழுத்தித் உங்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும். சீற்றம், மனக்கசப்பு போன்றவற்றை நீக்குவதற்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி ஆகிய வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். இந்த வார்த்தைகள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதே போல், வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவர்களாகக் காட்டும். என்ன இதெல்லாம் செய்ய நீங்க ரெடியா? அப்படின்னா உங்க வாழ்க்கையில் இனிமே நோ டென்ஷன். வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
Average Rating