ஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்…!!
ஆடவர் அணிகின்ற மேல்சட்டை வகைகளில் பாரம்பரிய குர்தா வகை ஆடைகள் அனைவரையும் கவர கூடியவை. ஏனெனில் வண்ணமயமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் வார இறுதியில் அணிய ஏற்றது என்பதும் அணிந்த ஆடவர் அனைவரும் மேம்பட்ட அழகும் கம்பீரமும் பெறுவர்.
ஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்
தற்கால இளைஞர்கள் மனங்கவரும் வகையில் பெரிய நீண்ட வகை குர்தாக்கள் மாற்றம் செய்யப்பட்டு ஷார்ட் குர்தாக்களும் வந்தன. ஷார்ட் குர்தாக்கள் தற்போது அதிலும் மேம்படுத்தப்பட்டு சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் என்றவாறு உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன.
குர்தாக்கள் பருத்தி, பட்டு, லினன் போன்ற துணி வகைகளில் உருவாக்கப்படுவதால் இந்திய பருவகாலத்திற்கு ஏற்றபடி வெயில் காலம் மற்றும் மழைகாலம் இரண்டிலும் அணியும் போதும் சவுகரியமாகவும் கச்சிதமாகவும் உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் என இளம் வயதினர் கல்லூரி மற்றும் பார்ட்டிகளுக்கு அணிய ஏற்றவாறு புதிய டிசைன், வடிவமைப்பு, மாறுபட்ட வண்ண அச்சுக்கள் என்றவாறு சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் வருகின்றன.
சூப்பர் ஷார்ட் குர்தாவின் சிறப்புகள்
ஷார்ட் குர்தா என்பவை குர்தா போன்ற மேன்டரின் காலர் மார்பு பகுதி வரை பட்டன் என்பதுடன் முட்டி பகுதி வரை தொங்கும் துணி பகுதியை குறைத்து இடுப்பு பகுதி என்றவாறு உருவாக்கப்பட்டன. இதில் கை அமைப்பு நீண்டவாறும், சற்று குறைந்தவாறும் இருந்தன. ஆனால் சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் என்பது கை அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. நீண்ட கை அமைப்பு மாற்றப்பட்டு அரை கைப்பகுதி உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட கைப்பகுதி இருப்பினும் அதனை மடித்து விட்டு பட்டன் பகுதியுடன் இணைத்து விடும் வசதியும் உள்ளது. இதனால் சட்டை போல் முழு கைகுர்தாவை மடக்கி விட முடியும் என்பதுடன் அதனை மடிப்புடன் இருக்க செய்ய பட்டன் பிடிப்பும் உள்ளது.
பிரிண்டட் சூப்பர் ஷார்ட் குர்தா
கல்லூரி மற்றும் சாதாரணமாக அணிய ஏற்றவாறு பூக்கள் மற்றும் கணித டிசைன்கள் பிரிண்டட் செய்யப்பட்டவாறு சூப்பர் ஷார்ட் குர்தா கிடைக்கின்றன. அரை கை, மடிப்பு கை மற்றும் முழுக் கை அமைப்பில் இந்த பிரிண்டட் ஷார்ட் குர்தா வருகின்றன. பருத்தி துணியில் கலம்காரி மற்றும் பல ஓவியங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஷார்ட் குர்தாவினை அணியும் போது ஏற்படும் சுகமே தனி! அதுபோல் காம்ரிக் காரி பிரிண்டட் ஷார்ட் குர்தாக்களும் கிடைக்கின்றன.
லினன் சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்
மென்மை சாயல் ஒற்றை நிற பின்னணியில் உருவாகும் லினன் ஷார்ட் குர்தாக்கள் உயர் அந்தஸ்து மற்றும் கவுரவத்தின் வடிவமாக திகழ்கிறது எனலாம். அது மாதிரியான தோற்றப்பொலிவும், வண்ண சாயலும் ஷார்ட் குர்தா அமைப்பும் அழகுடன் மிளிர்கின்றன. அடர்த்தியான நிறத்திலும் லினன் குர்தாக்கள் கிடைக்கின்றன. மேலும் லினன் அரைக்கை குர்தக்கள் மாடர்ன் ஷார்ட்களை போன்றும் உள்ளன.
பளபளக்கும் பட்டு ஷார்ட் குர்தாக்கள்
விழா மற்றும் பண்டிகைக்கு அணிய ஏற்றவாறு சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் முகா பட்டு துணியில் பளபளப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவும் அரைகை, முழுக்கை மற்றும் மடிப்பு வசதி கொண்டவை என்றவாறு கிடைக்கின்றன. சில காலர் பகுதிகளில் வேறு வண்ண டிசைன் மற்றும் துணிகள் இணைக்கப்பட்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. பட்டு ஷார்ட் குர்தாக்களில் சில எம்பிராய்டரி செய்யப்பட்ட வடிவமைப்புடன் வருகின்றன.
சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் மேற்கண்ட துணி வகைகள் மட்டுமின்றி காட்டன் சில்ப், காட்டன் சட்னா என்ற துணி வகைகளிலூம் கிடைக்கின்றன. சிலப் என்பது அதிக நெருக்கமின்றி காற்றோட்டமான துணி வகை. இதனை அணியும் போது குளுகுளுவென இருக்கும். அதுபோல் அரை கைப்பகுதியில் மாறுபட்ட வட்ட பட்டை டிசைன் செய்யப்பட்டவாறும் சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் வருகின்றன. இவையனைத்தும் இளைஞர் மனங்கவரும் வகையில் பல வண்ணங்களில் வெவ்வேறு விதமான துணி வகைகளில் உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன.
Average Rating