வெற்றி யார் பக்கம்? பிக்பாஸ் கண்ணாடி சொல்வது என்ன..!!

Read Time:4 Minute, 16 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)பிக்பாஸில் இன்னும் ஓரிரு தினங்களில் ஃபைனலுக்கு செல்லவிருக்கிறது. மிகப்பிரம்மாண்டமாக நடக்கப்போகும் அந்த நிகழ்வில் வெற்றி பெறப்போவது யார் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு.

இவர்களின் வெற்றி மக்களின் கையில் தான். ஆனாலும் அவர்களின் முயற்சிக்கும் பலனுண்டு. அதாங்க டாஸ்க். சும்மாவா. அது இருக்கட்டும் ஒவ்வொரு முறையும் நாமினேட் ஆகி எவிக்ட் ஆகாம உள்ள இருக்கிறதுனா சும்மாவா.

இவர்கள் நடந்துகொள்ளும் விதம், எப்படி மற்றவர்களுடன் ஒத்துபோகிறார்கள் என பார்ப்பவர்களின் பார்வையில் எப்படி வேண்டுமானாலும் தெரியலாம்.

சரி., யார் எப்படி என பார்போமா..

ஹரீஷ்

wild card மூலம் வந்தவர் மீது பெரும் எதிர்பார்ப்பு. காரணம் ஆரவ்க்கு போட்டியாக இருப்பார் என்பது தான். ஆனால் நடந்ததோ வேறு. இருவரும் கைகோர்த்து நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். அவரால் முடிந்ததை செய்தாலும், சட்டென டல்லாகி விடுவார்.

வீட்டுக்குபோகிறேன் என சொல்வார். இதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாலும் இயல்பானவர், சுட்டி, சின்னத்தம்பு என நல்ல பெயரெடுத்துவிட்டார். ஆட்டம், பாட்டம் என கலக்கியவர்.

ஆரவ்

மாடலிங் மேன் போல வந்தாலும், எதை நிதானித்து செய்யக்கூடிய அணுகுமுறை இவருக்கு பக்கபலமாக இருக்கிறது. அனைவரிடத்திலும் எந்த பகைமையும் இதுவரை வைத்தில்லை.

சினிமா பின்னணியில்லாத இவருக்கு ரசிகர்கள் தற்போது சேர்ந்தாலும் ஓவியா விசயத்தில் ஆரவ்வின் முடிவு பலருக்கும் அதிருப்தியே. இது ரசிகர்களின் புலம்பல். என்ன செய்ய, அவரவர் வாழ்க்கை முடிவெடுக்க நாம் யார் என்று உள்மனது சொல்லும்.

கணேஷ்

தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்தவருபவர் கணேஷ். முட்டை விஷயத்தில் நமக்கு முகம்சுளிப்பு இருக்கிறதோ இல்லையோ, போட்டியாளர்களுக்கு டென்சன் தான். அதிலும் வையாபுரியின் புலம்பலை மறக்க முடியாது.

சமீபத்தில் கூட நாகரிகமாகனவர் என மற்றவர்களால் பாராட்டப்பட்டார். சேஃப் கேம் விளையாடுகிறார் என்ற கருத்திருந்தாலும் எல்லோருடனும் நட்பு கொண்டிருந்தார். காட்டில் விட்டால் கூட கம்னு இருந்திடுவார்.

சினேகன்

கட்டிப்பிடி வைத்தியத்துக்கு பேர் போனவர் என பார்த்தவர்கள் சொல்வர். ஆனால் ஆரம்பம் முதல் மற்றவர்கள் செய்ய தயங்கும் விசயங்களை தயங்காமல் செய்வது இவரின் குணம் என்றாலும் சாணக்கிய தந்திரம் என பெயர் வாங்கிவிட்டார்.

பல முறை தலைமையாக இருந்தாலும் தலைமைத்துவம் நிறைந்த நபர். அப்பாவின் வருகையால் எல்லோரையும் எமோஷனல் ஆக்கிய கவிஞர் கடைசி நேரத்தில் தேர்தல் வாக்குறுதி போல சொன்ன விஷயம் ஒருமாதிரி இருக்கிறது.

போட்டியாளர்கள் மத்தியிலும், சமூக வலைதள கருத்துக்கள் அடிப்படையிலும் பார்க்கும்போது சினேகன், கணேஷ் பெயர் தான் அதிகம் அடிபடுகிறது. இருந்தாலும் இறுதி முடிவுக்கு உங்களை போல தான் நாங்களும் காத்திருக்கிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனை கலாய்த்து மனைவி செய்த காரியம்… வேர்ல்டு ஃபேமஸ் ஆனது எப்படி?..!!
Next post வெண்டைக்காயின் மருத்துவகுணம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!!