இசையுலகில் கால் நூற்றாண்டு: இந்தியா முழுவதும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள்..!!
ரோஜா படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.
‘ஸ்லம் டாக் மில்லியனைர்’ படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவின் புகழையும், பெருமையையும் சர்வதேச அரங்கில் இவர் நிலைநாட்டினார்.
இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்துள்ளார்.
1992-ம் ஆண்டில் இவர் முதன்முதலாக இசையமைத்த ரோஜா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இசையுலகில் தனது வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில் இந்தியாவில் ’என்க்கோர்’ என்ற இசை சுற்றுப்பயணத்தின் மூலம் சில இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர். ரஹ்மான் நடத்துகிறார்.
அதில் முதல்கட்டமாக, வரும் 26-ம் தேதி ஐதராபாத் நகரிலும், டிசம்பர் 3-ம் தேதி அகமதாபாத் நகரிலும், டிசம்பர் 17-ம் தேதி மும்பையிலும், டிசம்பர் 23-ம் தேதி டெல்லியிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். நாடு முழுவதிலும் இருந்து இசைக் கலைஞர்களும் பாடகர் – பாடகியர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஏ.ஆர். ரஹ்மான் இந்த இசைப் பயணத்தில் சென்னை நகரை ஏன் சேர்க்கவில்லை? என்பது தொடர்பான விரிவான தகவல் ஏதுமில்லை. எனினும், இரண்டாவது கட்டமாக வரும் ஜனவரி மாதவாக்கில் சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு அவர் திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating