காலில் ஆணியா? இதோ உங்களுக்கான பாட்டி வைத்தியம்..!!

Read Time:2 Minute, 27 Second

201709281512592743_home-remedies-for-plantar-wart_SECVPFகால் ஆணி பாதங்களை தாக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று. இந்த கால் ஆணி பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்களை தரையில் வைக்கவே முடியாத அளவிற்கு வலி உண்டாகும். இது உடல் அழுத்தம் காரணமாகவும். செருப்பு அணியாமல் நடப்பதாலும், கால் ஆணி உள்ளவர்களின் செருப்பை பயன்படுத்துவதாலும் உண்டாகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த பிரச்சனையை போக்குவது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள். கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது. காலுக்குப் பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும். கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிப்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னுடைய முதல் சம்பளம் ரூ. 75: சல்மான்கான்..!!
Next post நடமாடும் பினமாக வாழும் பெண் – அரிய வகை நோய்..!!