குர்மீத் ராம் அந்தரங்க வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கும் ராக்கி சாவந்த்..!!

Read Time:3 Minute, 41 Second

201709281729381152_Karmi-Ram-as-cinematic-film-Rakhi-Sawant-interviewed_SECVPFஅரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பிரபலமான தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் ஆசிரமத்துக்கு வந்த பெண்களை கற்பழித்ததாக, 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குர்மீத் ராம் ரகீம் சிங் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு பலர் கொல்லப்பட்டனர்.

குர்மீத் ராம் ரகீம் சிங் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங். கலவரத்தை தூண்டியதில் தொடர்பு இருப்பதாக அவரையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

குர்மீத் ராம் ரகீம் சிங் வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகிறது.

மத தலைவர் பொறுப்புக்கு அவர் வந்தது, பெண் சீடர்களிடம் தகாத முறையில் நடந்தது, ஆசிரமத்தில் ரகசிய அறைகள் வைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது, சினிமா ஆசையில் கோடிகளை கொட்டி படங்கள் எடுத்து கதாநாயகனாக நடித்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் படத்தில் இடம்பெறுகிறது.

இந்த படத்தை இந்தி நடிகை ராக்கி சாவந்த் தயாரித்து சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங் வேடத்திலும் நடிக்கிறார். குர்மீத் ராம் ரகீம் கதாபாத்திரத்தில் ரஸா முரத் நடிக்கிறார். இதுகுறித்து ராக்கி சாவந்த் அளித்த பேட்டி வருமாறு:-

“குர்மீத் ராம் ரகீம் சிங்கை 3 வருடங்களாக எனக்கு தெரியும். அவரது ஆசிரமத்துக்கு நான் சென்று இருக்கிறேன். சாமியார் என்ற போர்வையில் நாடகமாடி மக்களை அவர் ஏமாற்றி வந்ததை நேரிலேயே கண்டு இருக்கிறேன். ஆசிரமத்தில் வயாகரா மாத்திரைகள் இருந்தன.

வளர்ப்பு மகள் என்று சாமியார் தத்தெடுத்த ஹனிபிரீத்துடனும் அவருக்கு தகாத உறவு இருந்தது. ஓட்டலில் ஒரே அறையில் இருவரும் தங்கி நெருக்கமாக இருந்தை பார்த்து அதிர்ந்து போனேன். குர்மீத் ராம் ரகீம் சிங்கின் இருட்டு பக்கங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அப்போதே முடிவு செய்து விட்டேன்.

என்றாவது ஒருநாள் போலீசில் அவர் சிக்குவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. நான் நினைத்ததுபோலவே ஜெயிலுக்கு போய் இருக்கிறார். இதனால் அவரது அந்தரங்க வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கிறேன். இதில் ஹனிபிரீத் சிங் வேடத்தில் நானே நடிக்கிறேன். ஜெயிலுக்குள் இருந்து தனது வாழ்க்கையை குர்மீத் ராம் ரகீம் சிங் சொல்வதுபோல் ‘பிளாஷ் பேக்’கில் படம் தொடங்கும். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது”.

இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லைக் காட்டினால் பணம் கிடைக்கும்..!!
Next post BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவர்தானா?..!!