பெண்களுக்கு கச்சித அமைப்புடன் கம்பீர தோற்றம் தரும் கவுன்கள்…!!

Read Time:5 Minute, 41 Second

201709270943519297_ladies-party-Frock_SECVPFநவநாகரீக ஆடைகளை விரும்பி அணியும் பெண்கள் தற்போது கவுன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இந்திய பேஷன் கலாசாரத்தில் கவுன் என்ற பெண்களின் ஆடை தற்போது பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது.

பெண்களுக்கு கச்சித அமைப்புடன் கம்பீர தோற்றம் தரும் கவுன்கள்
நவநாகரீக ஆடைகளை விரும்பி அணியும் பெண்கள் தற்போது கவுன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இந்திய பேஷன் கலாசாரத்தில் கவுன் என்ற பெண்களின் ஆடை தற்போது பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. பெண்கள் பார்மல் மாலைநேர நிகழ்வுகளுக்கு அணிய ஏற்ற கச்சிதமான ஆடையாக கவுன் திகழ்கிறது.

அது பெரிய சிவப்பு கம்பள நிகழ்ச்சிகளாக ஆயினும், மாலைநேர மகிழ்ச்சி கொண்டாட்ட நிகழ்வுகளாயினும், விஐபிகளின் இரவு விருந்து என்றபோதும், திருமண வரவேற்பு போன்றவையாயினும் கவுன் தான் கவுரவம் மிகுந்த ஆடையாக விரும்பி அணிந்து செல்கின்றனர். ஆடிபாடும் இரவு கேளிக்கை விருந்து முதல் கருத்துறு பார்ட்டிகள் வரை பெண்களை அழகுடன் மிளர வைப்பதிலும், கம்பீரமாய் காட்சிபடுத்துவதிலும் கவுன்தான் முதலிடம் பிடிக்கின்றன.

இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் ஆங்கிலேயே பாணி கவுன் ஆடைவடிவமைப்புடன் இந்திய பாணியையும் இணைந்தவாறு வடிவமைக்கின்றன. இதனால் இந்திய பெண்கள் கவுனை விரும்ப தொடங்கினர். தற்போது டிசைனர் மற்றும் நீளமான அதிக விரிப்புகள் கொண்ட கவுன்கள் வண்ணமயமாய் உருவாக்கி தரப்படுகின்றன அதுபோல் இந்திய பெண்கள் விரும்பும் கற்பதிப்பு வேலைப்பாடும் கவுன்களில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அனைத்து தரப்பு பெண்களும் தங்கள் ரசனைகளுக்கு ஏற்ற கவுன்களை தேர்ந்தெடுத்து அணிந்து வருகின்றனர்.

பூ வேலைப்பாடு கவுன்கள் :

நீண்ட கவுன் அமைப்பில் கீழ் விரிந்த பகுதியில் மட்டும் அதிக பட்ச மலர்கள் வண்ணமயமாய் பூத்திருப்பது போன்று பளபள பட்டு பிரிண்ட் செய்யப்பட்டு உள்ளன. மேல் சட்டை பகுதியின் இருபுறம் மட்டும் அழகிய பூ அமைப்பு டிசைன் செய்யப்பட்டுள்ளது. பிங்க், பச்சை, நீல நிற பின்னணி முழு ஆடை அமைப்பில் கவுன் கீழ் பகுதியில் அதிக மலர்களுகம், மேற்பகுதி உயர உயர பூக்கள் குறைவது போன்றும் வடிவமைப்புகள் உள்ளன. இதில் கருத்து வடிவமைப்பு என்பது வட்டவடிவம், சைனீஸ் காலர், போட் நெக் போன்ற பல வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

விழாகளுக்கு அணிய ஏற்ற எம்பிராய்டரி கவுன்கள் :

இந்திய பெண்கள் விரும்பி அணியும் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட கவுன்கள் கிடைக்கின்றன. இவை அடர்த்தியான ஒற்றை நிற பின்னணியில் கீழ் பகுதி விரிப்புகளில் தங்க சரிகையில் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் பட்டு துணியில் தயாராகும் இந்த கவுன்கள் இந்திய கலாசார மற்றும் பண்டிகை விழாக்களில் அணிய கூடியவாறு உள்ளன. இடுப்பு பகுதி வரை இறுக்கி பிடித்தவாறும் பின் சரிவாய் குறைவான விரிப்புகள் உள்ளவாறும் கச்சிதமாக எம்பிராய்டரி கவுன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கை அமைப்பில் மாறுபட்ட கவுன்கள் :

கவுன் ஆடையின் கை அமைப்புகள் நீளமாய், முக்கால், அரக்கை, ஸ்யில் லெஸ் என்றவாறு மாறுபட்ட அமைப்புடன் உள்ளன. இந்த கவுன்களை விற்பனை செய்யும் போது இந்த கை அமைப்பு மட்டும் தைக்கபடாமல் நமது விருப்ப தேர்விற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து தைத்து கொள்ளலாம்.

அது போல் கவுனுடன் இணைந்த முழு கை ஆடை என்பதில் வேறுபட்ட வண்ண வேலைப்பாடு அழகுற உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது முழுகவுன் அமைப்பும் ஒரு ஒற்றை நிறத்திலும் கழுத்துடன் இணைந்த கை அமைப்பு பூ மற்றும் கணித வடிவங்கள் பிரிண்ட் (அ) இரட்டை துணி வெளிபாடு கொண்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்கால கல்லூரி மற்றும் கார்ப்பரேட் அலுவலக மங்கையர் கவுன்களை விரும்பி அணிவதில் ஆர்வமாய் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் உடலுறவுக்கு ஆசை படுவதற்கான காரணங்கள்..!!
Next post படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் ஜுங்கா..!!