கூந்தல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் உணவுகள்..!!

Read Time:3 Minute, 21 Second

201709211216304951_hair-problems-control-Foods_SECVPFதினமுமே சில உணவுகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளப் பழகினால் கூந்தல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து நிரந்தரமாகத் தப்பிக்கலாம். கூந்தலைப் பாதுகாக்கும் சில உணவுகளை பார்க்கலாம்.

* பொன்னாங்கண்ணி கீரையை மதிய உணவுக்கு பொரியல் செய்து சாப்பிடவும்.

* செம்பருத்திப்பூவை அரைத்து தோசை மாவில் கலந்து செய்து சாப்பிடவும்.

* அரைக்கீரை கூட்டு செய்து காலை மற்றும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளவும் (கூந்தலுக்கு இரும்புச்சத்து கொடுக்கும்).

* வல்லாரை கீரையை சப்பாத்தி மாவு, அரிசி மாவு இதனுடன் கலந்து காலை அல்லது இரவு உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

* கறிவேப்பிலையிலேயே முழுஉணவாகச் செய்து சாப்பிடாவிட்டாலும், குழம்பு, ரசம், பொரியலில் சேர்க்கிற இலைகளையாவது ஒதுக்காமல் உண்ணப் பழகலாம்.

* வாரத்தில் ஒரு நாளாவது கார்போக அரிசி சாதம் வடித்து சாப்பிடவும்.

* நில ஆவாரை, துவரம் பருப்பு, தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.

* சோற்றுக்கற்றாழை சாறு குடிக்கலாம்.

* முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து அப்படியே மென்று சாப்பிடலாம்.

* கீழாநெல்லி சாறு 1 டீஸ்பூன் எடுத்து அதனுடன் தயிர், சிறிது அளவு உப்பு சேர்த்து குடிக்கவும்.

* நாட்டு மருந்துக் கடைகளில் திரிபலா தூள் கிடைக்கும். தண்ணீரில் 1 டீஸ்பூன் திரிபலா தூள் கலந்து அந்த நீரை குடிக்கவும்.

* குப்பைமேனி, பருப்புடன் கலந்து கூட்டு செய்து சாப்பிடவும்.

* முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

* பயத்தம் பருப்பு, பசலைக்கீரை, வெந்தயம் ஆகியவற்றை வேக வைத்து கூட்டு செய்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடவும்.

* 2 நெல்லிக்காயை மிக்ஸியில் அரைத்து தேன் கலந்து குடிக்கவும்.

* அறுகம்புல் சாற்றில் தேன் கலந்து குடிக்கவும்.

* வல்லாரைக் கீரையில் சாறு எடுத்து எலுமிச்சைச்சாறும் தேனும் கலந்துகுடிக்கவும்.

* பால், முட்டை, மீன் இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

* முளைக்கட்டிய கருப்புக் கொண்டைக் கடலையை வேக வைத்து மாலையில் எடுத்துக் கொள்ளவும்.

* தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிடவும்.

* குழம்பில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளவும். நாவல்பழம் சாப்பிடவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவின் போது ஏற்பட்ட பாதிப்பு..!! தம்பதிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பு..!!
Next post உடல் எடை குறைத்து அடுத்த ஆட்டத்திற்கு ரெடியான நடிகை..!!