ஒரே நாளில் ரிலீசாகும் 11 படங்கள்…!!

Read Time:2 Minute, 31 Second

11-films-released-500x500தமிழில் வாரந்தோறும் சராசரியாக 4 படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

அடுத்த வாரம் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’, மகேஷ்பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’, கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மகாதேவகி’, நயன்தாராவின் ‘அறம்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன.

எனவே, இந்த வாரம் தியேட்டர்களை பிடிப்பதற்காக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மட்டும் 11 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இதில் ராணா நடிப்பில் உருவான அரசியல் படம் ‘நான் ஆணையிட்டால்’, எரிவாயு குழாய் பிரச்சினையை சொல்லும் ‘தெருநாய்கள்’, அனுஹாசன் நடித்துள்ள ‘வல்லதேசம்’, சரண் இயக்கத்தில் வினய் நடித்துள்ள ‘ஆயிரத்தில் இருவர்’, இனிகோ பிரபாகர் நடித்திருக்கும் ‘பிச்சுவாகத்தி’, சிலை கடத்தலை பின்னணியாக கொண்ட ‘களவு தொழிற்சாலை’, கோகுல் நடிக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்’ இவைதவிர ‘பயமாஇருக்கு’, ‘நெறி’, ‘காக்கா’ ஓவியா மலையாளத்தில் நடித்து தமிழில் ‘டப்’ செய்யப்பட்டுள்ள ‘போலீஸ் ராஜ்ஜியம்’ ஆகியவை களம் இறங்குகின்றன.

தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்து 200 சினிமா தியேட்டர்கள் உள்ளன. ஏற்கனவே சமீபத்தில் வெளியாக அஜித்தின் ‘விவேகம்’, விக்ரம்பிரபுவின் ‘நெருப்புடா’, விஷ்ணுவிஷாலின் ‘கதாநாயகன்’ கடந்த வாரம் திரைக்கு வந்த விஷாலின் ‘துப்பறிவாளன்’, ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட படங்கள் பல தியேட்டர்களில் ஓடுகின்றன.
மீதம் உள்ள தியேட்டர்களில் இந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அடுத்த வாரம் ஆயுத பூஜையையொட்டி வரும் படங்கள் பல தியேட்டர்களை பிடிக்கும். இதில் நாளை மறுநாள் வெளியாகும் 11 படங்களில் எத்தனை தாக்கு பிடிக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுஜாவை தாருமாறாகக் திட்டும் ஹரிஷ்..!! (வீடியோ)
Next post ஆட்டுகுட்டிகாக தன் உயிரை பொருட்படுத்தாத மனிதர்..!! (வீடியோ)