சுருள்சிரை நரம்பு பிரச்சனையால் ஏற்படும் பாதிப்பு..!!

Read Time:3 Minute, 49 Second

201707270829323599_Varicose-Vein-problem-create-health_SECVPFபொதுவில் arleries, Veins இவற்றினை ரத்த நாளங்கள் என்றும் nerve என்பதனை நரம்பு என்றும் குறிப்பிடுவோம். ஆனால் Varicose Venisஎன்பதனை உரையாடல் வழக்கத்தில் நரம்பு முடிச்சு என்றும் சுருள் சிரை நரம்பு என்றும் குறிப்பிடுகின்றனர். Arteries என்பதற்கும் Veins என்பதற்குமான வித்தியாசத்தினை முதலில் பார்ப்போம்.

இதனை புரிந்து கொண்டால் Varicose Vein பாதிப்பினைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடியும். வேரிகோஸ் வெயின் என்பது உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும் பாதிப்பு என்றாலும் அதிகமாக தொடைப் பகுதிக்குக் கீழேயும், ஆடு தசையிலும் அதிகம் காணப்படும். இவை விரிந்த ரத்த நாளங்கள். சற்று வீங்கி, நிறம் மாறி, சுருண்டு இருக்கும். ஸ்பைடர் வெயின் எனும் ஒருவகை பிரிவும் இதில் உண்டு. எட்டுகால் பூச்சி போல் இவை தோற்ற மளிக்கும். சருமத்தின் கீழே காணப்படும் இந்த வேரிகோஸ் வெயின் பாதிப்பு சிலருக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் கூட இருக்கலாம்.

ஆனால் பலருக்கு
* அதிக வலி
* எரிச்சல், வீக்கம், சதை பிடிப்பு ஆகியவை இருக்கும்.
* அதிக நேரம் உட்கார்ந்தாலோ, அதிக நேரம் நின்றாலோ வலி கூடும்.
* பாதிப்புடைய இடத்தினைச் சுற்றி அரிப்பு
* பாதிப்புள்ள ரத்த குழாய்களிலிருந்து ரத்த கசிவு
* புண்

* ஊதா, நீலம், சிகப்பு, கறுப்பு போன்ற நிறமாற்றங்கள் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. வெயின்ஸ் என்ற ரத்த குழாய்கள் ரத்தத்தினை உடலின் மற்ற பகுதியிலிருந்து இதயத்திற்கு கொண்டு செல்கின்றது என்பதனைப் பார்த்தோம்.

ஆகவே இவை ஈர்ப்பு விசைக்கு எதிராக வேலை செய்ய வேண்டி உள்ளது. தசைகளின் சுருக்கம் குழாய்களின் எலாஸ்டிக் சுவர்களும் ரத்தத்தினை இருதயம் நோக்கி அனுப்புகின்றன. இதிலுள்ள வால்வு ரத்தம் கீழே வராமல் தடுக்கின்றது.
இந்த வால்வு செயலிழக்கும் பொழுதும், நாளங்களின் சுவர் பலவீனப்படும் பொழுதும் பாதிப்பு ஏற்படுகின்றது.
மேலும் இந்த பாதிப்பிற்கு காரணமாக

* முதுமை – இதனால் ரத்த நாளங்கள் வலுவிழக்கும். இதனால் ரத்தம் நாளங்களில் தேங்கி வீங்கி விடும்.

* கர்ப்பம் – கர்ப்ப காலத்தில் கால்களிலிருந்து இடுப்பிற்கு வரும் ரத்தத்தின் வேகம், அளவு குறையும் வாய்ப்பு அதிகமாவதால் கால்களில் வீங்கிய ரத்த குழாய்கள் இருக்கும். ஹார்மோன் மாறுபாடுகளும் காரணமாக இருக்கலாம். பேறு காலத்திற்குப் பிறகு 12 மாதங்களில் சகஜ நிலை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

* பரம்பரை காரணமாக பாதிப்பு ஏற்பட கூடுதல் வாய்ப்புகள் உண்டு.

* அதிக எடை கால்களில் அதிக அழுத்தத்தினை ஏற்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை அவதூறாக பேசிய காயத்ரி ரகுராம்… தயாராக இருங்க!.. சுஜாவின் அனல் பறக்கும் காட்சி..!! (வீடியோ)
Next post ப்ளூவேல் விளையாட்டின் மிரட்டல்… தற்கொலை செய்யத் துணிந்த பெண்ணின் குமுறல்..!! (வீடியோ)