பெண்களுக்கு புளி தரும் அழகு..!!

Read Time:2 Minute, 17 Second

201709181136083241_tamarind-face-pack_SECVPFபுளியை பயன்படுத்தி முகத்திற்கு பொலிவையும், புத்துணர்ச்சியையும் ஊட்டலாம். முகத்தில் வடுக்கள், தோல் திட்டுக்களால் அவதிப்படுபவர்களுக்கு புளி சிறந்த பலனை கொடுக்கும்.

* தண்ணீரில் புளியை சிறிது நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

* புளியை பயன்படுத்தி முகத்திற்கு ‘பேஷியல்’ செய்யலாம். புளியை சிறிது அரைத்து, அதனுடன் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று காட்சி தரும். வடுக்களும் மறைய தொடங்கும்.

* இறந்த செல்களை நீக்கி முகத்திற்கு பளிச் தோற்றம் தருவதிலும் புளியின் பங்களிப்பு அதிகம். புளியுடன் பால் கலந்து மென்மையான துணியால் முகத்தை தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* புளியை ரோஸ் வாட்டரில் கலந்து ஸ்பிரேயாகவும் பயன்படுத்தலாம். அதனை கடுங்குளிர் மற்றும் கோடை காலங் களில் பயன்படுத்தி வருவது சரும வறட்சியை போக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும்.

* கண்களுக்கு அடியில் படரும் கருவளையங்களை போக்கவும் புளியை பயன்படுத்தலாம். புளி, பால், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து குழைத்து கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த பாலை கொண்டு கண்களை கழுவிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க பேசி புரிஞ்சுக்கங்க..!!
Next post காதலருடன் நெருக்கமாக நயன்தாரா ..!!