உயர் ரத்த அழுத்ததால் உடலில் ஏற்படும் பாதிப்பு..!!

Read Time:2 Minute, 35 Second

201709171352142291_problems-of-high-blood-preasure_SECVPFஉயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கடைப்பிடிக்காவிட்டால், இதயம், சிறுநீரகம் போன்றவை செயலிழக்கும் அபாயம் ஏற்படும்.

* உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்டவர்கள் உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதுபோல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் உணவை பதப்படுத்துவதற்காக உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றில் சிலவகை ரசாயன கலவைகளும் இடம் பெற்றிருக்கும்.

* ஊறுகாயை அடிக்கடி உணவில் சேர்த்து ருசிப்பது தவறு. அதிலும் உப்பு அதிகம் சேர்ந்திருக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் குறைந்த அளவு சேர்த்துக்கொள்ளலாம். சிறுவயதிலேயே ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக அதனை தவிர்ப்பது அவசியம்.

* உப்பு கலந்த திண்பண்டங்களை தவிர்ப்பதும் நல்லது. அதில் கலந்திருக்கும் உப்பு தாகத்தை அதிகப்படுத்தும். அதன் தாக்கம் ரத்த குழாய்களை பாதிக்கும்.

* சூப் வகைகளை தயாரித்ததும் குடிக்க வேண்டும். அவை பதப்படுத்தப்பட்டிருந்தால் அத்தகைய சூப்புகளை குடிக்காமல் இருப்பதே நல்லது. அதிலும் உப்பு அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும்.

* மது குடிப்பதும் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். அதிலுள்ள ஆல்கஹால் ரத்த குழாய்களை வெகுவாக பாதிக்கும். அதுபோல் மது அருந்தும்போது துரித உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. அவையும் உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு வழிகோலும்.

* கேக்குகள், குக்கீஸ்களில் சுவைக்காக உப்பு மற்றும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. அவைகளையும் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தவிர்ப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாறுமாறாக வரும் விதி மதி உல்டா
Next post பிரபல டிவி தொகுப்பாளர் ”ரம்யா” வின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்..!! (வீடியோ)