கணவரை கொலை செய்து பிணத்துடன் வாழ்ந்த பெண்..!!
இந்தியாவில் கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை பொலிசார் கையும் களவுமாக கண்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தை சேர்ந்த நிதிஷ் அதிகாரி, ஷில்பி அதிகாரி தம்பதிகளுக்கு திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நிதிஷ்- ஷில்பி டெல்லியில் சிறிய வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் மேற்குவங்கத்தில் நிதிஷின் பெற்றோரால் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
32 வயதான ஷில்பி அதிகாரி டெல்லியில் தனியார் வங்கி ஒன்றில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நிதிஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து அவரின் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இதனால் கடும் கோபமடைந்த ஷில்பி வேறுவழியில்லாமல் நிதிஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.கடந்த 22ம் திகதி இரவு கணவருக்கு மதுவை கொடுத்து அவரை போதையில் மூழ்கடித்த ஷில்பி தலையணையால் கணவரின் முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளார்.
கொலை செய்துவிட்டு கணவரின் உடலை என்ன செய்வது என தெரியாததால் கணவரின் இறந்த சடலத்துடன் இரண்டு நாட்கள் இருந்துள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து, தன் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி அழுது அக்கம்பக்கத்தினரை நம்பவைத்துள்ளார்.
சந்தேகம் அடையாத அக்கம்பக்கத்தினர் நிதிஷ் இயற்கையான முறையில் மரணமடைந்துவிட்டதாகவே நினைத்து அவருடைய உடலை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.நிதிஷின் உடலைக் கண்ட பொலிஸ் இன்பார்மர் ஒருவர் நிதிஷின் கழுத்தில் காயங்கள் இருப்பதையும், அவரின் உடலில் அளவுக்கு அதிகமான துர்நாற்றம் வருவதையும் உணர்ந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் உடலை பிரேதப்பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பின்னர் அதன் பிரேத பரிசோதனையின் அறிக்கையில் தான் அவர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய ஷில்பியை பொலிசார் கைது செய்துள்ளனர்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating