தாம்பத்திய வாழ்க்கையை துளிர்க்க வைக்க ஐந்து கட்டளைகள்..!!

Read Time:6 Minute, 45 Second

201709131132114826_couples-in-bed_SECVPFதிருமணம் முடிந்த ஒருசில ஆண்டுகளிலேயே பல தம்பதிகளுக்கு தாம்பத்திய வாழ்க்கை சலிப்பாகிவிடுகிறது. அந்த சலிப்பு அவர்களது தாம்பத்திய ஆசைகளுக்கு போடப்படும் அதிரடிப்பூட்டாகிவிடுகிறது. அந்த பூட்டு போடப்பட்டுவிட்டால், அவர்கள் வாழ்க்கையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கத் தொடங்கிவிடுகின்றன. அடிக்கடி வாக்குவாதங்களை ஏற்படுத்தி, தேவையில்லாமல் முட்டிமோதிக்கொள்கிறார்கள். சில நேரங்களில் அது தவறான தொடர்புகளுக்கும், சந்தேகங்களுக்கும்கூட காரணமாக அமைந்துவிடுகிறது.

சலிக்கும் தாம்பத்திய உறவை, மீண்டும் புது உற்சாகத்துடன் அனுபவிக்க ஆய்வு ரீதியில் ‘செக்ஸ் உணர்வு மீட்பு சிகிச்சை’ உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் சுமார் 60 சதவீதம் தம்பதியரின் தாம்பத்திய வாழ்க்கை சலிப்பாகவே செல்வதாக தெரிய வந்துள்ளது. அவர்களின் படுக்கை ஒன்றாக இருந்தாலும் அவர்களிடையேயான இடைவெளி தூரமாக உள்ளது. அதற்கு திருப்தியின்மையும், இணையின் மீதான சலிப்பும்தான் முக்கிய காரணங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்களுக்குள் தாம்பத்திய தொடர்பு இடைவெளி அதிகம் விழுகிறது. வேலைப்பளு, அதனால் ஏற்படும் உடல்சோர்வு மற்றும் மன அழுத்தம், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவையும் செக்ஸின் மீதான நாட்டத்தை குறைத்துவிடும். சில நேரங்களில் அது அரைகுறை விருப்பத்துடனான உறவாகிவிடும். அத்தகைய உறவு கொள்பவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாணியில், சில நிமிடங்களில் உறவை முடித்துக்கொண்டு உறங்கச் செல்வதிலே குறிக்கோளாக இருப்பார்கள். இத்தகைய உறவு, விரைவாகவே அந்த தம்பதிகளை சலிப்பு நிலைக்கு கொண்டு சென்று விடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தாம்பத்திய வாழ்க்கையை மீண்டும் துளிர்க்கவைக்க ஐந்து விதமான கட்டளைகளை பாலியல் நிபுணர்கள் வகுத்து தந்திருக்கிறார்கள்.

முதலில் கண்டவற்றையும் விருப்பம்போல உண்பதற்கு தடைபோடுகிறார்கள். அவசியமானவற்றை அளவாக சாப்பிட வேண்டும். தேவையான நேரத்தில் உண்ணாவிரதம் கடைப்பிடித்து உடலை சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். இது பலவிதங்களில் உடலை உறவுக்கு தயார்படுத்தும் என்கிறார்கள்.

இரண்டாவதாக, துணைவருடன் செக்ஸ் தொடர்பான விருப்பங்களை மனம் திறந்து பேச வேண்டுமாம். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான முறையான தொடர்பே ‘செக்ஸ்’ என்பதை புரிந்துகொண்டு, இணையின் விருப்பத்துக்கு ஈடுகொடுத்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள்.

மூன்றாவதாக தேவையற்ற கவலை, மன அழுத்தம், பொருளாதார சிக்கல் போன்றவற்றை உறவு நேரத்தில் தள்ளிவைக்க வேண்டுமாம். தனிப்பட்ட வெறுப்பு கலந்த விவாதங்களும் அந்த நேரத்தில் தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

நான்காவதாக,தேவைப்பட்டால் உறவுக்குத் தேவையான உடல்திறனை அதிகரிக்க மருத்துவ ஆலோசனையையும், மனநல ஆலோசனையையும் பெற வற்புறுத்துகிறார்கள்.

ஐந்தாவதாக, குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். கணவரைவிட்டு மனைவியோ- மனைவியை விட்டு கணவரோ குறைந்தபட்சம் ஒருமாதம் பிரிந்திருந்தால், அது அவர்களிடையே தாம்பத்திய ஆர்வத்தை மேம்படுத்தும் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக சொல்கிறார்கள். அந்த இடைவெளி அவர்களுக் குள் ஏக்கத்தை உருவாக்கி, அதுவரை இருந்த கசப்புகளை எல்லாம் காணாமல் போக்கடித்து விடுகிறதாம்.

இந்த ஐந்து விஷயங்களால் உடல்- மன அளவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன தெரியுமா?

உணவுப் பழக்க வழக்கத்தையும், மருத்துவ ரீதியிலான ஆலோசனைகளையும் பின்பற்றும்போது உடல் ஆரோக்கியம் அதிகரித்து உறவுக்கு தயாராகும். இதனால் நீண்ட நேர இன்பம் சாத்தியமாகும். துணையுடன் மனம்விட்டு விருப்பத்தை பகிர்தல், அதன்படி உறவு கொள்வது, கவலைகளை ஓரம்கட்டிவைத்துவிட்டு உறவுக்கு தயாராவது போன்றவை உணர்ச்சிப்பூர்வமான உறவுக்கு கைகொடுக்கும்.

உற்சாகமான உறவு உச்சத்தையும், இன்பத்தையும் வாரி வழங்கும். தம்பதிகளுக்குள் ஒரு மாத இடைவெளியை ஏற் படுத்துவது அவர்களுக்குள் தாம்பத்திய வேட்கையை அதிகரிக்கும். உறவைத் தூண்டும் ஹார்மோன் களான டெஸ்டிரோன், ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டிரோன், ஆக்சிடாசின் மற்றும் வாசோபிரெசின் போன்றவற்றை நன்கு சுரக்கச் செய்யும். துரிதமான ஹார்மோன் சுரப்பானது உணர்ச்சிகளை மொத்தமாகத் தூண்டக்கூடியது. இதன் மூலம் உறவு இனிமையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சியில் எல்லை மீறிய டாப்ஸி- வீடியோ இதோ..!!
Next post சீனா, ஜப்பான் பெண்களின் அழகு ரகசியம்! அட இவ்ளோ சிம்பிளா..!!