வெள்ளி இறகுகளுடன் வானத்தில் பறக்கும் மனித உருவங்கள்…!! (வீடியோ)
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறப்பதாக தகவல் பரவியுள்ளது.இந்த உருவங்களுக்கு கைகளுக்கு பதில் 2 இறக்கைகள் வெள்ளி போல வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன.
கால்கள் மனிதர்களுக்கு இருப்பது போல நீளமாக உள்ளன.இந்த உருவங்கள் பூமியை நோக்கி பறந்து வருவதாகவும் பின்னர் வானத்துக்கு சென்று விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சில உருவங்கள் வீட்டு கூரை மீது நின்றபடி கீச்… கீச்… குரலில் பேசிக் கொள்வதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.இந்த பகுதி மக்கள் வெயில் காலத்தில் காற்றுக்காக வீட்டுக்கு வெளியேபடுத்து தூங்குவது வழக்கம். மனித உருவங்கள் பறப்பதாக தகவல் வந்தவுடன் யாரும் வெளியே படுப்பது இல்லை.
இரவு 7 மணிக்கே வீட்டு ஜன்னல், கதவுகளை மூடிக் கொள்கிறார்கள். சிலர் ஜன்னலை மட்டும் திறந்து அந்த உருவங்களை பார்க்கிறார்கள்.அந்த உருவங்கள் முதலில் கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அது மனித உருவில் இருப்பதால் பேயாக இருக்கலாம் என்றும், தேவதைகளாக இருக்கலாம் என்றும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இவர்கள் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த உருவத்தால் நெல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பிரேசிலில் பறந்த கிரேக்க தேவதைகள்இது போல் கடந்த 2014 ஆ ஆண்டு பிரேசில் நாட்டில் கிரேக்க தேவதைகள் போல் இறக்கையுடன் பறந்த மனித உருவங்கள் சிலவற்றை அந்நாட்டை சேர்ந்த போவிஸ்டா எனபவர் வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து உள்ளார்.
ஆந்திராவில் பறந்ததாக கூறப்படும் உருவங்கள் பிரேசிலில் பறந்த உருவங்களை போல் ஒத்த தன்மை கொண்டதாக உள்ளது.இந்த வீடியோவை ரிக்கார்டோ ரோகி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ந்தேதி அப்லோடு செய்து உள்ளார்.ஆனால் அதே படங்களை வாட்சப்பில் பதிவு செய்து இவ்வாறுய் புரளியை கிளப்புகிறார்களா என தெரியவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating