பட்ஜெட்டிற்குள்ளான அழகு குறிப்புகள்..!!

Read Time:3 Minute, 45 Second

201709051427557786_Beauty-tips-within-the-budget_SECVPFபணப் பற்றாக்குறை காலங்களில், பெண்கள் அவர்களின் அழகை பராமரிப்பதற்கென செலவிடுவது முடியாத காரியம். வீட்டிலேயே தயாரிக்கப்படும் பட்ஜெட்டுக்குள்ளான அழகு பராமரிப்பு டிப்ஸ்கள், இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைக்கு மிகவும் நல்லது. இங்கு விலை குறைவான மற்றும் அவசியமான சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடாவை உபயோகித்தல் அனைவரின் சமயலறையிலும் உள்ள பண்டங்களில் பொதுவாக இடம் பெறுவது, இந்த பேக்கிங் சோடா. இது முகத்தினை தூய்மைப்படுத்தி பளபளப்பாக்குவதோடு, அழுக்கை அகற்றும் ஷாம்புவாகவும் பயன்படுகிறது. இது பாதங்களில் உள்ள மாசினையும், துர்நாற்றத்தையும் நீக்க வல்லது.

ஸ்ட்ராபெர்ரியைக் கொண்டு பருக்களை குறைக்கலாம் ஸ்ட்ராபெர்ரி பேஸ்ட்டில், சாலிசிலிக் அமிலம் அதிக அளவில் அடங்கி உள்ளது. பருக்களை விரட்டுவதற்கு இது மிகவும் எளிதான அழகுக் குறிப்பு. மேலும் இது மலிவானது. நீங்கள் இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து விட்டால், நல்ல தீர்வைப் பெற முடியும்.

எலுமிச்சையின் திறன் எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் சேர்த்து, அதில் விரல் நுனிகளை சில நிமிடங்கள் ஊற வைப்பதன் மூலம், நகங்களின் இடுக்குகளில் உள்ள மஞ்சள் நிற அழுக்குகள் எளிதில் நீங்கி விடும். இது தோலில் உள்ள உலர்வை நீக்கி, உங்கள் கைகளுக்கு நீர்ச்சத்தை அளிக்கிறது.

சர்க்கரை ஒரு ஸ்க்ரப் சர்க்கரை என்பது பட்ஜெட்டுக்குள்ளான அழகுப் பொருட்களில் மிகவும் இயற்கையானது ஆகும். சர்க்கரையில் உள்ள படிமங்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தோல் அடுக்குகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

வாழைப்பழ பேஸ் பேக் வாழைப்பழம், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான நன்மைகளை ஏற்படுத்துவதோடு, எளிதில் கிடைக்கக்கூடிய மிகவும் மலிவான அழகு சாதனப் பொருள். வாழைப்பழத்தை நன்கு மசித்து முகத்திற்கு தடவுவதன் மூலம், சருமம் நல்ல ஆரோக்கியத்தையும், பொலிவையும் பெறும். இது ஒரு இயற்கையான பேஸ் பேக்.

தேன் ஒரு கண்டிஷனர் மலிவான அழகுக் குறிப்புகளில், உங்கள் கைகளில் உள்ள எளிதான ஒப்பனை பொருள் தேன். அதனை நீங்கள் உங்கள் முடிக்கான கண்டிஷனராக பயன்படுத்தலாம். அது உங்கள் கூந்தலுக்கான நீர்ச்சத்தை அதிக அளவில் வழங்குகிறது.

உங்களுடைய ஒப்பனைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக மேற்கூறிய பட்ஜெட்டுக்குள்ளான அழகுக் குறிப்புகள் அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்..!!
Next post ஹன்சிகா இடத்தை பிடித்த கேத்ரின் தெரசா..!!