நீங்கள் திடீர் கோபம் கொள்பவரா? அப்போ இது உங்களுக்கு தான்..!!

Read Time:3 Minute, 13 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90கோபம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒரு சாதாரண உணர்வு.இந்தக்கோபம் எங்கு ஆரம்பிக்கின்றதென்றால் சிறு வயதில் ஏதாவது ஒரு பொருளை அல்லது நமக்கு பிடித்த ஏதாவதொன்றை நம்மிடத்தில் தராத போது இந்த உணர்வு எம்முள் ஆரம்பிக்கின்றது.அப்பிடி ஒரு கோப உணர்வை வெளிப்படுத்தும்போதுதான் நமக்கு பிடித்தது நமக்கு வந்தடைகின்றது.

இப்பிடி இருக்கும் இந்த கோபத்தால் நன்மைகள் என்றும் இருப்பதில்லை .அளவுக்கதிகமான விளைவுகளும் ஆபத்துக்களும் மனஉளைச்சல்களும் எரிச்சல்குணமும் விரக்தியும் மனஸ்தாபங்களும் இப்படியாக அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டு போகலாம். எந்தப்பிரச்னையாக இருந்தாலும் சரி,உங்களை கோபமூட்டும் வகையில் என்ன நடந்திருந்தாலும் சரி உங்கள் கோப உணர்வை வெளிப்படுத்த முன்னர் வார்த்தைகளை வெளிப்படுத்த முன்னர் இரு பக்க விசாரணைகளை நியாயமாகவும் அவதானமாகவும் கூர்ந்து அவதானியுங்கள்.அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலையினையும் நினைவில் கொள்ளுங்கள்.

தவறு எந்த இடத்தில ஆரம்பித்திருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.இவ்வாறு செயற்பட்டால் எந்தவிதமான பிரச்சினைகளும் வளர்க்கப்படமாட்டாது.அதோடு நாம் கோபப்பட வேண்டிய அவசியமும் இருக்காது. அதிக கோபத்தால் நமக்கு உயர் குருதி அழுத்தம் ஏற்படும்.கோபத்தில் நாம் என்ன செய்கின்றோம் எப்படி நடந்து கொள்கின்றோம் என்பது நமக்கு அந்த வேளையில் தெரிவதில்லை.

உடல் உளம் சார்ந்த வேறு வேறு பிரச்சினைகள் எம்முள் வளர ஆரம்பிக்கும்.இதனை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மனவருத்தத்தை ஏற்படுத்தும் எந்தவொரு பிரச்சினைகளாக இருந்தாலும் முடிந்த வரை நிதானமாக இருக்க பழகிடுங்கள்.சகல கோணத்திலிருந்தும் சிந்திக்கப்பழகிடுங்கள்.அவசரப்பட்டு தீர்வு எடுக்கும் பழக்கத்தை நிறுத்திடுங்கள். நிதானமாக பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்.

எவ்வாறான பிரச்சினைகளும் நாம்தான் தீர்வு.தீர்வு சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த குறையும் எந்த கோபதாபங்களும் யாருக்கும் இருக்காது.சுமுகமான உறவை அனைவரிடத்தும் கொள்ளுங்கள்.அதிக கோபம் என்றுமே ஆபத்துதான்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே நேரத்தில் 17 குட்டிகளை பிரசவிக்கும் பாம்பு… மிக அரிய காட்சி..!! (வீடியோ)
Next post தீக்காயம் தழும்பாகாமல் இருக்க உடனடி பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்..!!