காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்..!!
இப்போது பெரும்பாலானோரின் விருப்ப உணவாக காளான் மாறிவருகிறது. இவை மிகுந்த சுவையுள்ளதாகவும், சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு, ஏராளமான மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது.காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது
காளானில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிகளவு பொட்டாசியம் சத்துக்கள் உள்ளதால் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
காளானில் உள்ள லென்டிசைன், எரிடாடின் எனும் வேதிப்பொருட்கள், ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தை சுத்தமாக்கும்.100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.காளானில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. அதே சமயத்தில் குறைந்தளவு தான் கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதிலிருக்கும் ஃபைபர் மற்றும் சில என்சைம்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவிடுகிறது. அதே நேரத்தில் இதிலிருக்கும் ப்ரோட்டீனும் கொலஸ்ட்ராலை கரைக்க உதவிடும்.
ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சோர்வு, தலைவலி, ஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். அவர்கள் காளான் சாப்பிடலாம். காளானில் இரும்புச் சத்து அதிகமுண்டு.காளானில் கொழுப்பு இல்லை, கார்போஹைட்ரேட்டும் இல்லை. இதில் அதிகளவு ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அதைவிட அதில் நிறைய தண்ணீர் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட காளானில் இயற்கையாகவே இன்சுலின் இருக்கிறது. இவை உணவுகளில் இருந்து கிடைக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்திடும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating