ஆடை வடிவமைப்பும்.. அழகிய பின்னணியும்..!!

Read Time:5 Minute, 42 Second

201708211434331423_Clothing-design-beautiful-background_SECVPFஇளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் மாறுபட்ட டிசைன்களை பிரதிபலிக்கும் புது வரவு ஆடைகளை அணிந்து தங்களை பல்வேறு விதத்தில் அழகுபடுத்திப் பார்க்க விருப்பப்படுகிறார்கள். அவர்களின் ரசனைக்கேற்ப ஹாலிவுட் படங்களில் தோன்றும் கதாநாயகிகளின் உடை தேர்வு முறை அமைந்திருக்கிறது. ஹாலிவுட் நடிகைகள் பெரும்பாலும் ஒருமுறை அணிந்த பேஷன் உடையை வேறொரு படத்தில் அணிவதில்லை. உடை மாற்றத்தை வைத்துதான் கதாபாத்திர மாற்றத்தை மக்கள் உணர முடியும் என்ற எண்ணத்தில் புதுபுது பேஷன் உடை வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அதை போன்றே கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை கவர்ந்திருக்கும் விதத்தில் ஆடை வடிவமைப்பாளர்கள் புதுரக உடைகளை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய சூழ் நிலையில் உள்ளனர். அதற்கேற்ப பேஷன் டிசைனிங் படிப்பில் நவீனரக ஆடைகளை வடிவமைப்பது பற்றி கற்றுத்தரப்படுகிறது. எனினும் படித்து அறிந்த விஷயங்களுடன் அவரவர் கற்பனை திறனுக்கேற்ப விதவிதமான அலங்கார டிசைன்களில் மிளிரும் ஆடைகளை வடிவமைத்து தங்களின் தனித்துவத்தை நிலைநாட்டுகிறார்கள். அவர்களின் கற்பனை கலந்த கைவண்ணத்தில் உருவாக்கம் பெறும் ஆடைகளை மக்கள் முன்பு அறிமுகப்படுத்த பேஷன் ஷோக்கள் நடத்தப்படுகின்றன.

நவீனரக ஆடைகளை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுபவர்கள் இத்தகைய பேஷன் ஷோக்களை விரும்பி காண செல்கிறார்கள். ஒவ்வொரு பேஷன் டிசைனரும் அவரவர் டிசைன் செய்த நவீன ஆடைகளை மாடல்களுக்கு அணிவித்து மேடையில் ஒயிலாக நடக்க விடுவார்கள். அப்படி அவர்கள் நடந்து வரும்போது அந்த ஆடை வடிவமைப்பைப் பற்றிய அனைத்து விவரங்களும் பின்னணியில் விளக்கப்படும். அந்த ஆடைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அதை வடிவமைத்தவருக்கு பேஷன் உலகில் மதிப்பு கூடும்.

“காலத்திற்கேற்ப ஆடை வடிவமைப்பு ‘ஸ்டைல்’கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நடுவில் சில காலம் தகதகவென்ற சம்கி, ப்ளிங், பளபளக்கும் டிசைன்கள் பிரபலமாக இருந்தது. ‘எம்ராய்டரிங் வேலை, சரிகை அய்வரி த்ரெட் ஒர்க்’ என்று பழைய டிசைன்கள் இப்போது மீண்டும் தலைதூக்க தொடங்கி இருக்கிறது. காஷ்மீர் வேலைப்பாடுகள் அமைந்த உடைகளும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எந்த மாதிரியான டிசைன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை ரசனையறிந்து ஆடை வடிவமைப்புக்குள் கொண்டுவர வேண்டும். சில டிசைன்கள் பார்க்க நன்றாக இருக்காது. ஆனால் அணிந்துகொண்டால் அழகாக மிளிரும். அதை பிரபலமான யாரையாவது கொண்டு அறிமுகப்படுத்தினால் எளிதில் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்துவிடும். இந்தியப் பெண்கள் எப்போதும் புதிய டிசைன்களை விரும்புவார்கள். அதுதான் அவர்களுடைய பலமும், பலவீனமுமாக இருக்கிறது.

சாதாரணமாக அலங்காரம் செய்து கொள்ளவே இந்தியப் பெண்கள் பலமணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். பேஷன் ஷோ என்றால் சொல்லவே தேவையில்லை. பேஷன் உடைகளை உடுத்து சில மணித் துளிகளே மேடையில் தோன்றும் மாடல் அழகிகளை தயார் படுத்த எவ்வளவு நேரம் செலவிட வேண்டி இருக்கிறது தெரியுமா? அவர்களை அலங்கரிக்க தனிப்பட்ட பேஷன் வல்லுநர்கள் தேவை. அவர்களின் உழைப்பில் பலமணி நேர அலங்காரத்திற்கு பின்னர் மாடல்கள் மின்னலென மேடையில் தோன்றுகிறார்கள்.

அறிமுகம் வடிவமைக்கப்படும் உடைக்குதான் என்றாலும் அதை அணியும் பெண்கள் நல்ல உடலமைப்போடு, தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருக்கவேண்டும். எந்த டிசைனை எப்படி அணிந்தால் அழகாக இருக்கும், மேடையில் எப்படி தோன்ற வேண்டும்? இதெல்லாம் ஒரு மதி நுட்பம். சாதாரண டிசைனை கூட ஒருசில பெண்கள் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும். அதில் ஆடையை அணியும் நேர்த்தியும், தன்னம்பிக்கையும் உள்ளடங்கி இருக்கிறது. ‘பர்சனாலிட்டி’ என்பதே தன்னம்பிக்கையில் வெளிப்படுவது. அதுதான் அழகு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிப்- லாக் கிஸ் எப்படி கொடுக்க வேண்டும்?… இதுலயாச்சும் கத்துக்கோங்க..!!
Next post குழந்தை வரம் கொடுக்கும் பூசாரி… எப்படின்னு தெரியுமா?..!!