முகம் சுருக்கம் நீங்க எளிய வழிகள்..!!

Read Time:5 Minute, 27 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (2)30 வயதை தாண்டினாலே பெண்கள் தங்கள் அழகு குறித்து கவலைப்படுவதுண்டு. ஏனெனில் 30 வயது ஆகிவிட்டாலே பெண்களுக்கு முகச் சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது.

இதனை தடுக்க அழகு நிலையங்களுக்கு போய் அழகுபடுத்துவதை விட வீட்டிலே நாம் எளிய வழிகளைக் கையாளுவோம்.

முதலில் ஆலிவ் எண்ணெயினால் முகத்தை தடவி மசாஜ் செய்து, பின்னர் முகத்தைக் கழுவாமல் ஒரு கேரட் சாற்றுடன் கடலைமாவு இரண்டு ஸ்பூன் கலந்து பூசி 30 நிமிடங்கள் கழித்து முகத்தினை நன்றாக கழுவி வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் காணலாம்.

முட்டையுடன், எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சுருக்கம் விழுந்துள்ள பகுதிகள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி உலர விடுங்கள். பிறகு கழுவி விடுங்கள்.

பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து பசைபோல் அதைச் செய்து முகத்தில் தடவிக் கொண்டு 30 நிமிடங்கள் காய வைத்து பின் கழுவவும் இவ்வாறு செய்வதால். சுருக்கங்கள் விழுவது தள்ளிப்போகும்.

பசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவில் படுக்கச் செல்லும்முன் முகத்தில் மேல்நோக்கி மென்மையாக மசாஜ் செய்த பின் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறைந்துவிடும்.

ஒரு டீஸ்பூன் முட்டைக்கோஸ் சாறுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் காயவிட்டு நன்றாக பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தாலும் முகச்சுருக்கம் நீங்கும்.

முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க பன்னீரில் சிறிதளவு கிளிசரின் கலந்து முகத்தில் தினமும் தொடர்ந்து தடவி வரவேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்தால் சுருக்கம் மறைந்துவிடும்.

இரவு படுக்கும் முன் கடுகெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் சரிசமனாக கலந்து முகம், கழுத்தில் தேய்த்து காலையில் கடலை மாவு, பயத்தம் மாவு கலந்து தேய்த்துக் கழுவலாம். முகச்சுருக்கம் நீங்கி முகம் புத்துணர்வு பெற்று காணப்படும்.

பாதாம் பருப்பு ஒன்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மையாக அரைத்து முகம், கழுத்தில் பூசி ஊறவைத்துக் குளிக்கலாம். இவ்வாறு செய்வதல் தோல் சுருக்கங்கள் மறையவாய்ப்புண்டு.

வெள்ளரிக்காய் சாறு ஒரு தேக்கரண்டி, தக்காளி சாறு ஒரு தேக்கரண்டி, காரட் சாறு ஒரு தேக்கரண்டி, தயிர் ஒரு தேக்கரண்டி, கடலைமாவு ஒரு தேக்கரண்டி சேர்த்து குழைத்துப் பூசி வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஓட்ஸ் மாவுடன் சந்தனப் பவுடர் மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ள விதையை நன்றாக அரைத்து அத்துடன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி வர விரைவிலேயே முகச்சுருக்கம் நீங்கும்.

சந்தனப்பவுடருடன் பன்னீர், கிளிசரின் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு இரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?..!!
Next post உலக அழிவை தெரியப்படுத்த அதிசய தூண்… அதிர்ச்சியூட்டும் தகவல்…!! (வீடியோ)