பேச்சுலராக இருக்கிறது அப்பப்போ விரக்தியா இருக்கா?… எப்படி அதை சமாளிக்கிறது..!!

Read Time:3 Minute, 11 Second

B0BDC707-46A1-4176-BD67-01C5D1C67C80_L_styvpf-333x250தனியாக வாழ்வதை நாம் சுதந்திரம் என்று நினைத்தாலும் கூட, அப்படி வாழ்வதிலும் கொஞ்சம் கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது.

குறிப்பாக, நண்பர்கள் திருமணம் செய்துகொள்ளும் போதோ அல்லது நண்பர்கள் காதலியுடன் டேட்டிங் செல்லும்போதோ தான், தன்னுடைய தனிமை, தனக்கே சுமையாகத் தெரிய ஆரம்பிக்கும்.

அதிலும், ஏதேனும் விழாக்களுக்கு, நண்பர்கள் குடும்பத்துடன் வரும்பொழுது, உங்களுடைய தனிமை உங்களை கூச்சத்தால் நெளிய வைக்கும். இதுபோன்ற சங்கடங்களில் இருந்து வெளிவரவும் தனிமையைச் சவாலாக எதிர்கொள்ளவும் பல நிறுவனங்கள் பயிற்சியளிக்கின்றன.

மனிதர்கள் தான், எப்போதும் தனக்காக ஒரு துணையைத் தேடிக்கொள்கிறோம். தனிமையில் வாழ்வது மிகப் பெரிய தியாக வாழ்க்கையெல்லாம் கிடையாது. தனிமையில் யார் வேண்டுமானாலும் வாழ முடியும் என்பதை முதலில் புரிந்து கொண்டாலே போதும்.

ஒவ்வொருவருடைய சூழலும் தான் அவர்களுடைய வாழ்க்கை நிலையைத் தீர்மானிக்கிறது. அதனால், பிறருடைய வாழ்க்கையோடு நம்முடைய வாழ்க்கை முறையை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது.

உலகத்தில் பாதிபேர், திருமணமான பின்பு, ஏன் திருமணம் செய்துகொண்டோம் என்று நாம் புலம்புவதைப் பார்த்திருக்கிறோம். அதனால், இரவு முழுக்க தூங்காமல் உங்கள் தனிமையைப் பற்றி, தேவையில்லாமல் கற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, அந்த சூழலை எதிர்கொண்டு எப்படி வாழ்வது என்பதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.

உறவினர்களை சந்திக்கும் போதெல்லாம், ஏன் தனியாக இருக்கிறாய், என்ன பிரச்னை என்று கேள்வி கேட்டு நம்மை துன்பப்படுத்தி விடுவார்கள். அதேபோல் தான், வீட்டிலும் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அதுவே மிகப்பெரிய மனமுறிவை ஏற்படுத்தி விடும்.

இதையெல்லாம் கண்டு சோர்வடைந்து போகாமல், உங்களுக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ, உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை தேவை எனத் தோன்றுகிறதோ அந்த வாழ்க்கை கிடைக்கும் வரை, சோர்ந்து போகாமல் செயல்படுங்கள். அப்போது தான் உங்கள் இலக்கை அடைய முடியும்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’..!! (வீடியோ)
Next post ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்படி கருப்பாக்கலாம்?..!!