உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சமோசா..!!

Read Time:4 Minute, 39 Second

201708091353046659_Is-it-not-healthy-to-eat-samosa_SECVPFநம் அன்றாட வாழ்க்கையோடு பின்னி பிணைந்துவிட்டவை டீ, காபி, சமோசா, போண்டா, பஜ்ஜி வகைகள். சமோசா சாப்பிட்டால் மூணு மணி நேரத்துக்கு பசியை தள்ளிப்போட்டு விடலாம்.

உருளைக்கிழங்கோடு வெங்காயம், பச்சைப் பட்டாணி, மசாலா பொடிகளை சேர்த்து தயாரிக்கும் பொருள்தான் சமோசா. சுவைக்காகவும், பசியை போக்குவனவாகவும் மக்களிடம் அறிமுகமான சமோசாவின் சுவைக்காக குழந்தைகளும் இன்று மயங்கி நிற்கின்றனர். இந்த சுவைக்காகவும், கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் சேர்க்கப்படும் பொருள்தான் சமோசா சாப்பிடுபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அது என்ன என்றால் வினிகர் தான். இதன் அறிவியல் பெயர் அசிட்டிக் அமிலம் என்று சொல்வார்கள்.

நாம் சாப்பிடும் பெரும்பான்மையான சமோசாவில் கலந்திருப்பது ரசாயன வினிகர்தான். சமோசாவின் சுவையில் இதை எளிதில் கண்டறிய முடியாது. சமோசாவை காலையில் தயார் செய்துவிட்டால் இரவு வரை கடைகளில் இருப்பதை பார்த்திருப்போம். சமோசாவை சூடாக கொடுப்பதற்காக பப்ஸ் வகைகளை வைத்து விற்கும் ஹாட் பாக்ஸில் வைத்தும் தற்போது விற்பனை செய்து வருகிறார்கள். பசியிலும், சமோசா கொடுக்கும் ருசியிலும் இதை பெரும்பாலும் கவனிப்பதில்லை.

இந்த ரசாயன வினிகர் பாத்திரங்கள் கழுவும் சோப், கை கழுவும் சோப் மற்றும் பாத்திரங்கள் கழுவும் எண்ணெயில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மலிவான விலையில் கிடைக்கும் இந்த ரசாயன வினிகரால்தான் பாத்திரங்கள் பளிச்… பளிச்…ன்னு காட்சி தருகிறது. நம் வயிற்றுக்குள் போகும் ரசாயன வினிகர் என்ன செய்யும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

“தரமற்ற ஆயில், மைதா மாவால் தயார் செய்யப்படும் சமோசாவை சாப்பிடவே கூடாது. அதுவும் இந்த ஆயில் அப்பிக் கிடக்கும் சிறிய சமோசாவை அறவே தவிர்க்கலாம். சமோசாவால் உடலுக்கு பெரியளவில் மைக்ரோ நியூட்டிரிஷியன், புரோட்டீன் சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆற்றல் மட்டுமே கிடைக்கிறது. முன்பெல்லாம் கேரட், பீன்ஸ்.. மாதிரியான காய்கறிகள் கலந்திருக்கும். இப்போதும் அதையும் போடுவதில்லை.

மேலும் மைதாவில் தயாரிக்கப்படும் சமோசா உடலுக்கு நல்லதல்ல. அதுவும் கடைகளில் விற்கப்படும் சமோசா தயாரிக்கும் எண்ணெய் தரமானதும் கிடையாது. தரமற்ற எண்ணெய், மைதா, வினிகர், தரமற்ற காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் சமோசாவை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெட்டு போகும்.

ஊறுகாயில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சேர்க்கப்படும் வினிகரை சுவைக்காக சேர்த்து தயாரிக்கிறார்கள். இது இயற்கையாக தயாரிக்கப்படும் வினிகராக இருந்தால் பரவாயில்லை. ரசாயன வினிகராக இருப்பதால் உடலில் அசிடிட்டி உருவாகி வயிற்றுப் புண்ணை வரவைக்கிறது. அதுவும் வாயு தொல்லை இருப்பவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு ஒருவித ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். நெஞ்சு கரிக்கும். நாளடைவில் அதுவே ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். செயற்கை வினிகரை தொடர்ந்து உணவில் கலப்பதால் புற்று நோய் வரும் என்று மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜுலியை துரத்தும் சோதனை… நர்ஸ் வேலையிலிருந்து அதிரடி நீக்கம்..!! (வீடியோ)
Next post சிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’..!! (வீடியோ)