கருவுற்றது அறியாமல் இருக்கும் 10 வயது சிறுமியின் பரிதாபம்..!!

Read Time:2 Minute, 11 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சண்டிகரில் உறவினர் ஒருவரால் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதால், 10 வயது சிறுமி கருத்தரித்தாக வெளியான சம்பவம் இந்தியாவை உலுக்கியுள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய உறவினர் தற்போது விசாரணையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார்.

அவர் கருத்தரித்து அதிக நாட்கள் கடந்துவிட்டதை காரணம் காட்டி, கருக்கலைப்பு செய்ய கோரிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் ஜூலை 28 ஆம் தேதி நிராகரித்துவிட்டது.

குழந்தையை சுமக்கின்ற தாயின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் சான்று அளித்தால் மட்டுமே அதற்கு மேலான வாரங்களான கருவை கலைக்க அனுமதி வழங்கப்படும்.

20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைப்பதை இந்திய சட்டம் அனுமதிக்கவில்லை.

ஆனால், தனக்கு என்ன நடக்கிறது என்பது கூட அறியாமல் அந்த சிறுமி இருப்பது தான் பரிதாபம். இதுகுறித்து உறவினர்கள் கூறியதாவது, உன்னுடைய வயிற்றில் பெரிய கல் இருக்கிறது, அதனால்தான் வயிறு வீங்கியுள்ளது என அவளிடம் கூறியுள்ளோம்.

முட்டை, பால் பழங்கள், மீன் மற்றும் கோழி இறைச்சி என சிறப்பு உணவுகள் அவருக்கு வழங்கப்படுகிறது. அதிக கவனம் அவர் மீது செலுத்தப்படுவதால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

6 ஆம் வகுப்பு படிக்கும் இவளுக்கு ஆங்கிலமும், கணிதமும் மிகவும் விரும்பமான பாடங்கள். ஓவியங்கள் வரைவதையும் விரும்புகிற அவர் சிறப்பாகவே ஓவியங்கள் வரைகிறார்.

இதுவே அவரின் பொழுதுபோக்காக உள்ளது என கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை..!!
Next post காகிதங்கள், அட்டைகள், கம்பிகள்’ – இவற்றை கொண்டும் ஆடை அலங்காரம்..!!