காதலுக்காக முகேஷ் அம்பானி நடுரோட்டில் செய்த காரியம்..!!
முகேஷ் அம்பானி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் சிறந்த தொழிலதிபராக திகழும் நபர். ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர் முகேஷ் அம்பானி தான் எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
வியாபாரத்தில் மட்டுமல்ல, காதலிலும் இவர் கெட்டி தான். தனது காதல் மனைவிக்கு ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் யோசிக்க முடியாத அளவில் ஒரு வியக்கத்தக்க பரிசை கொடுத்து அசத்தும் சூப்பர் காதலனும் கூட.
அப்பாவின் தேர்வு செய்த பெண்ணாக இருந்தாலும், நீத்தாவிடம் ப்ரபோஸ் செய்த பிறகே திருமணம் செய்துக் கொண்டார் முகேஷ்.
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்த நீத்தா அம்பானி தனது ஐந்து வயது முதலே பரதநாட்டியமும் கற்க துவங்கிவிட்டார். பல மேடைகளில் அரங்கேற்றமும் செய்துள்ளார்.
நீத்தா அம்பானிக்கு 20 வயது இருக்கும் போது, நவராத்திரி விழாவில் ஒரு மேடையில் பரதநாட்டியம் நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார். அவ்விழாவில் முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நீத்தாவின் நடன திறனை கண்டு வியந்தவர் அம்பானி. அவரை தனது மருமகள் ஆக்கிக்கொள்ள முடிவு செய்து, ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம் நீத்தாவின் தொடர்பு எண் பெற்று சென்றார்.
திருபாய் அம்பானி இருமுறை போன் செய்தும் நீத்தா அம்பானி சரியாக பேசாமல் ராங் நம்பர் என்று கட் செய்துள்ளார். அதன் பின்பே நீத்தாவின் அப்பாவிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவரிடம் “என் மகனை (முகேஷ்) திருமணம் செய்து கொள்வாயா?” என கேட்டுள்ளார். அதிர்ந்து போனார் நீத்தா. பின்பு தன் மகனை நேரில் சந்தித்து பேசவும் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் ஆறேழு முறை சந்தித்த போதும் காதல் பற்றியும் திருமணம் பற்றியும் பேசிக் கொள்ளவில்லை.
ஆனால் ஒருநாள் இருவரும் காரில் சென்றுக் கொண்டிருந்த போது. ட்ராபிக் சிக்னலில் கார் நின்றுக் கொண்டிருக்கையில், “நீத்தா நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா? என கேட்டுள்ளார் முகேஷ்.
சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. பின்னடி நின்ற அனைவரும் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தனர். நீத்தா நீ பதில் கூறாமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் என அடம் பிடித்துள்ளார் முகேஷ்.
பின்பு, “எஸ். நான் உன்னை திருமணம் செய்துக் கொள்வேன்” என நீத்தா கூறிய பின்பு தான் வண்டியை எடுத்துள்ளார் முகேஷ்.
அந்த பயணம் இன்று வரை இனிதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முகேஷ் ஒரு சிறந்த காதலன் என்பதற்கு உதாரணம், அவர் தனது காதல் மனைவிக்கு அளிக்கும் பரிசுகள்.
எத்தனை பெரிதாக எதிர்பார்ப்பு கொண்டிருந்தாலும், அதை தாண்டி ஒரு பெரிய வியக்கவைக்கும் பரிசை கொடுத்து அசத்துபவர் முகேஷ்.
கோடிகளை செலவு செய்தாலும், அதில் ஒரு தனித்துவம் கொண்டு பரிசளிக்க கிரியேட்டிவ் மைன்ட் வேண்டும். அந்த கிரியேட்டிவ் மைன்ட் தான் காதலிலும், தனது தொழிலும் முகேஷ் சிறந்து விளங்க காரணமாக இருக்கிறது போல.
Average Rating