சருமத்தை பொலிவாக்கும் இயற்கை வழிகள்..!!

Read Time:2 Minute, 26 Second

201708011126141314_Natural-ways-of-skin-cleansing_SECVPFசருமம் எப்போதும் பொலிவாக காட்சியளிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவார்கள். ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே சரும பொலிவை மெருகேற்றலாம்.

* அன்னாசி பழ சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதனை பஞ்சில் முக்கி முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை மென்மையாக கழுவி துடைத்தால், முகம் பிரகாசமாக மின்னும்.

* தேனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் வெயிலில் வறண்ட சருமம் புத்துணர்ச்சி பெறும். தொடர்ந்து சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப் படும்.

* ஒரு கப் தேங்காய் பாலுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை ஸ்பாஞ்சில் நனைத்து முகத்தில் தடவிக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிந்த நீரில் துடைத்து எடுத்தால் சருமம் புத்துணர்ச்சி பெறும்.

* காய்ச்சிய பாலை முகத்தில் தடவி வரலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் பிரகாசமாக ஜொலிக்கும்.

* தயிரை கொண்டும் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் தயிருடன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

* கற்றாழை ஜெல், பப்பாளி, ஆப்பிள் ஆகியவற்றை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வரலாம். சரும வறட்சி பிரச்சினையை எதிர்கொள்பவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் மனதில் அதிகமாக எழும் 4 செக்ஸ் சந்தேகங்கள், அதற்கான பதில்கள்…!!
Next post கோடியில் புரலும் நீட்டா அம்பானியின் செல்போன் விலை தெரியுமா?..!!