சூயிங்கம் விழுங்கினால் என்ன ஆகும்?..!!

Read Time:2 Minute, 50 Second

201707311339244761_happens-when-the-bubble-gum-eating_SECVPFகுழந்தையாக இருக்கும் போது சூயிங்கம் விழுங்கிவிட்டால் வயிறு ஒட்டிக்கொள்ளும், அது சரியாக 7 வருடம் ஆகும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். செரிமானம் ஆகாது என பல விஷயங்கள் கூறுவார்கள். இன்றும் கூட ஒருசிலர் சூயிங்கம் விழுங்கிவிட்டு பயப்படுவதுண்டு. ஆனால், உண்மையில் சூயிங்கம்மை விழுங்கினால் உடலுக்குள் என்ன ஆகும் என்பதை பற்றி பார்ப்போம்.

சிறு வயதில் சூயிங்கம்மை விழுங்கினால் அது செரிமானம் ஆகாது, ஒருசில வருடங்கள் அது வயிற்றில் தங்கிவிடும் என்றெல்லாம் கூறுவார்கள். இது முற்றிலுமான பொய். இனிப்பூட்டிகள் மற்றும் ஃப்ளேவர்கள் கொண்ட சூயிங்கம் வயிற்றில் செரித்து விடும்.

சூயிங்கமில் இருக்கும் அந்த கம் போன்ற மூலப்பொருள் எளிதாக கரையாது. அது வயிற்றிலேயே ஒட்டிக்கொள்ளும் என கூறுவார்கள். அப்படி இல்லை. மற்ற உணவுகளை காட்டிலும் இது முழுமையாக செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளுமே தவிர வயிற்றிலேயே தங்கிவிடாது.

வயிற்று கோளாறு போன்ற சில உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் சூயிங்கம் விழுங்கினால் பாதகமான விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படலாம். பெரிய அளவில். பெரிய அளவில் சூயிங்கம்மை விழுங்கினால் அது பிரச்சனைகளை உண்டாக்கும் வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் சில சமையம் சூயிங்கம்மை விழுங்கும் போது தொண்டையில் அது சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு.

உணவு சாப்பிட்ட பிறகு ஓரிரு நிமிடங்கள் சூயிங்கம் மென்றால் வாய் துர்நாற்றம் குறையும் வாய்ப்புகள் உண்டு. ஆயினும் அதிகம் சூயிங்கம் பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர்.

தினமும் அதிக நேரம் சூயிங்கம் மெல்வது தாடை எலும்பில் கோளாறுகள் உண்டாக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலிடம் ஒரு கோரிக்கை வைத்த குஷ்பு..!!
Next post மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய சம்மதித்த கணவன்: சாலையில் வீசிய பரிதாபம்..!!