தூக்கமின்மை பிரச்சினையா? எப்படி கற்றாழையை பயன்படுத்துவது தெரியுமா?..!!
கற்றாழை மிக அற்புத மூலிகைகளில் ஒன்று. கற்றாழை அழகு ஆரோக்யம் என இரண்டிற்கும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேஷம். கற்றாழை அருமையான சருமத்திற்கும் வளமான கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.
மேலும் வயிற்றுப் புண், ரத்த சுத்த்கரிப்பு என பல வேலைகளை தருகிறது. பல்வேறு உடல் பாதிப்புகளை சரி செய்ய எப்படி கற்றாழையை பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
தூக்கமின்மை – சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து குளித்தால் தூக்கமின்மை பிரச்சனை குணமாகும்.
கண்வலிக்கு – கண்களில் அடிபட்டதாலோ, மற்ற காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செயது; எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும். மூட்டு
வலிக்கு – மூட்டுவலிக்கு பயன்படுத்தப்படும் அலோசன் மருந்து சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் கால்சியமும் இதன் மூலம் பெறபப்டுகிறது.
வயிற்று வலிக்கு – சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை 10 முறை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.(இப்படிதான் அதன் சதைப்பகுதியை பயன்படுத்த வேண்டும்) கழுவிய காற்றழையுடன், 1 கிலோ,
விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து குறைவான தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த மருந்தை இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.
உடல் குளிர்ச்சி பெற – மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனை எண்ணெய் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் தணியும். குளிர்ச்சி பெறும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating