5 பெண்களை திருமணம் செய்து 6வது திருமணம் செய்ய முயற்சித்த இளைஞர்: சிக்கியது எப்படி?..!!

Read Time:2 Minute, 30 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70மும்பை மும்ப்ராப் பகுதியைச் சேர்ந்த நபர் தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார், இதனால் மணமகன் தேடியுள்ளார்.

அப்போது 32 வயதான இளைஞர் ஒருவர் அவரிடம் அறிமுகமாகியுள்ளார். அதன் பின்தான் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், டிராவல் ஏஜென்சி நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர் தன் மகளை இந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அதன் பின் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால், பெண் வீட்டார் திருமணத்தை தள்ளிப் போட்டிருந்த நிலையில், பெண் வீட்டாருக்கு சமீபத்தில் தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய நபர், தற்போது நீங்கள் பார்த்துள்ள மாப்பிள்ளைக்கு ஏற்கனவே 5 திருமணம் செய்து கொண்டவர் என்றும், உங்கள் பெண்ணின் வாழ்க்கையை வீணடித்து விட வேண்டாம் என்று கூறி வைத்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், உடனடியாக இது தொடர்பாக மாப்பிள்ளையிடம் கேள்வி கேட்டுள்ளனர். ஆனால் அவரோ இல்லை என்று கூறி மறுத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 22-ஆம் திகதி அந்த இளைஞரை திருமணம் செய்த 4 பெண்களும் பெண் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.

உடனடியாக பெண்ணின் பெற்றோர் மும்ப்ரா பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார்மீதும் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டு பொலிசிற்கு மூக்கில் குத்துவிட்டு தண்ணி காட்ட முயலும், நிர்வாண குடிகாரன்..!! (வீடியோ)
Next post பல்டியடித்து பறவைகளை துரத்தும் குட்டியானை: அழகான வீடியோ..!!