51 வயது ஆட்டோ சாரதியால் சீரழிக்கப்பட்ட சிறுமி… குழந்தை பெற்றுக் கொண்ட கொடுமை..!!

Read Time:3 Minute, 31 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)பத்தாம் வகுப்புப் படிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிச் சிறுமியை ஓராண்டாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது ஆட்டோ ஓட்டுநர் பொலிசார் பிடியில் சிக்கியுள்ளார்.

டெல்லியில் உள்ள முகர்ஜி நகரில்தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. முகர்ஜி நகரில் வசிக்கும் 15 வயது சிறுமியை,அவரது அண்டை வீட்டில் வசிக்கும் 51வயது ஆட்டோ டிரைவர், கடந்த ஓராண்டாக, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை வெளியில் சொல்லாமல் மறைப்பதற்காக அந்த கொடூர மனம் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் சிறுமிக்கு பணமும் கொடுத்துள்ளார்.

எனினும், சிறுமி எதிர்பாராவிதமாக கர்ப்பம் தரித்துள்ளார். இதனை அவரது பெற்றோர் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்வு ஒன்றுக்காக, பள்ளிக்குச் சென்ற சிறுமி, திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

உடனடியாக, கழிவறைக்குச் சென்ற அவருக்கு, அங்கேயே குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை சரியான உடல் வளர்ச்சி அடையாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை பள்ளி ஊழியர்கள் கண்டுபிடித்து, பொலிசில் புகார் கொடுத்தனர்.

பொலிசார் விசாரணையில், சிறுமி முறைகேடான வகையில், கர்ப்பம் தரித்ததாகவும், இதற்கு அண்டை வீட்டுக்காரர்தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த 51 வயது ஆட்டோ டிரைவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சிறுவர்-சிறுமியர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 13 மணி நேரத்திற்கும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2015ம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, நாட்டில் 10,000-க்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜுலியை திருத்த நினைக்கும் ஓவியா- ஆனால் அவர் செய்வது என்ன தெரியுமா?..!! (வீடியோ)
Next post மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்?..!! (கட்டுரை)